டெல்லி: வெளுத்து வாங்கும் கனமழை; சாலைகளில் பெருக்கெடுத்தோடும் மழை நீர்; நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!

டெல்லி உள்ளிட்ட வட இந்தியாவின் சில பகுதிகளில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. டெல்லி சப்தர்ஜங் பகுதி வானிலை ஆய்வு மையத்தில் நேற்று 153 மில்லி மீட்டர் மழை பதிவாகியிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த கனமழை காரணமாக டெல்லியின் பல்வேறு பிரதான சாலைகளில் மழைநீர் தேங்கியிருக்கிறது. பல சாலைகள் வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளன. இன்றும் தொடர்ந்து மழை பெய்தவண்ணம் உள்ளது. இதனால், மக்களின் இயல்புவாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஜாகிரா பகுதியிலிருந்த பழங்கால கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில், இருவர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.

கனமழை

பின்னர் அவர்கள் மீட்கப்பட்டனர். டெல்லியை ஒட்டிய குருகிராமில் பேருந்து நிலையம் உட்பட பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கிக் கிடக்கிறது. சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததையடுத்து, அவற்றை அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்றன.

இமாச்சல் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், ஹரியானா, ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களிலும் கனமழை பெய்து வருகிறது. மழை வெள்ளம் தொடர்பான விபத்துகளில் பலர் பலியாகி உள்ளனர். டெல்லியில் வீட்டின் கூரை இடிந்து விழுந்து முதியவர் பலியாகியுள்ளார். மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை அமைச்சர் பார்வையிட்டு, தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

கனமழை

இந்த நிலையில் தொடர் மழை காரணமாக டெல்லியில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.