தந்தையை திருமணம் செய்த மகள்? அதுவும் 4ஆவது மனைவியாம்.. டிரெண்டாகும் வீடியோ! உண்மை என்ன?

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டில் பெற்ற மகளையே தந்தை ஒருவர் 4ஆவது மனைவியாகத் திருமணம் செய்து கொண்டதாக இணையத்தில் பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

வெளிநாடுகளில் நாம் கற்பனை கூடச் செய்யவே முடியாத பல வினோதமான சம்பவங்கள் அரங்கேறும். இதுபோன்ற சம்பவங்களை நாம் படிக்கும் போது இப்படியெல்லாம் கூடச் செய்வார்களா என்பதே நம்மில் பலருக்கும் தோன்றும்.

அப்படிப் பல வினோதமான சம்பவங்கள் உலகின் பல பகுதிகளில் நடக்கும். இப்போது அதுபோல ஒரு சம்பவம் தான் பாகிஸ்தானில் நட்டதுள்ளதாக இணையத்தில் வீடியோ ஒன்று வேகமாகப் பரவி வருகிறது.

மகளைத் திருமணம்? பாகிஸ்தான் நாட்டில் பெண் ஒருவர் தனது சொந்த தந்தையைத் திருமணம் செய்து கொண்டதாக இணையத்தில் தகவல் வெளியானது. மேலும், இருவரும் ஜோடியாக இருப்பது போன்ற படங்களும் வீடியோக்களும் இணையத்தில் டிரெண்டானது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பெற்ற மகளையே தந்தை எப்படி திருமணம் செய்து கொள்ளலாம் என்று பலரும் இணையத்தில் கொந்தளித்து வந்தனர்.

அதாவது அந்த பெண்ணின் பெயர் ராபியா. பாகிஸ்தான் நாட்டை பொறுத்தவரை எப்போதும் நான்காவதாகப் பிறக்கும் பெண்ணுக்குத் தான் ராபியா எனப் பெயர் வைப்பார்களாம். ஆனால், இந்த பெண் அவர்களின் இரண்டாவது மகள் தானாம். அதாவது இரண்டாவதாகப் பிறந்த மகளுக்கு நான்காவதாகப் பிறக்கும் குழந்தைக்கு வைக்கும் ராபியா என்ற பெயரை வைத்துள்ளார். இதன் காரணமாகவே அந்த பெண் தனது தந்தை திருமணம் செய்தாக தகவல் பரவியது.

உண்மை என்ன: அதாவது தந்தையே தனது மகளை 4ஆவது மனைவியாகத் திருமணம் செய்து கொண்டதாக இணையத்தில் தகவல் வெளியானது. இதையடுத்து நெட்டிசன்கள் அவர்கள் வைத்துச் செய்துவிட்டனர். பெற்ற மகளையே எப்படி மணக்க முடியும் எனப் பலரும் கேள்வி எழுப்பினர். இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டான நிலையில், அந்த பெண்ணே விளக்கம் ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் பல சில தகவல்களைத் தெரிவித்திருந்தார்.

இருப்பினும், அந்த விளக்கத்தையும் தவறாகப் புரிந்து கொண்ட நெட்டிசன்கள் மேலும் அவர்கள் சாடி வருகின்றனர். ஆனால், உண்மையில் அங்கு நடந்ததே வேறு ஒரு சம்பவமாம். இது குறித்து அந்த பெண் அளித்த விளக்கத்தில், “நான் எனது தந்தையை எல்லாம் மணக்கவில்லை. நான் குடும்பத்தில் இரண்டாவது குழந்தை. ஆனால், எனக்கு ராபியா எனப் பெயர் வைத்தார்கள். பாகிஸ்தானில் எப்போதும் 4ஆவதாக பிறக்கும் குழந்தைக்கே ராபியா எனப் பெயர் வைப்பார்கள்.

 What is the Truth Does Pakistan daughter really marries his Father

விளக்கம்: அப்படியிருக்கும் போது எனக்கு அவர்கள் ஏன் ராபியா எனப் பெயர் வைத்தார்கள் எனப் புரியவில்லை. இது குறித்து நான் அவர்களிடம் கேட்ட போதும் அவர்கள் இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இதனால் விரக்தியடைந்த நான், வேறு ஒருவருக்கு 4ஆவது மனைவியாகச் செல்ல வேண்டும் என முடிவெடுத்தேன். அதன்படியே நான் இவருக்கு 4ஆவது மனைவியாக வந்துள்ளேன். எனது கணவரைத் திருமணம் செய்தாக கூறுவதில் எந்தவொரு உண்மையும் இல்லை” என்றார்.

உண்மை இப்படி இருக்க அந்த பெண் விளக்கம் அளித்த பிறகும், மொழி புரியாததால் பலரும் அவர் தனது தந்தையையே திருமணம் செய்துள்ளதாக விமர்சித்து வருகின்றனர்.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.