பாஜக ஒரு 15 ரூபாய் கொடுத்துச்சா? 8 நாளில் அடுத்த சம்பவத்திற்கு ரெடியாகும் ஸ்டாலின்!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் திராவிட இயக்க எழுத்தாளர் திருநாவுக்கரசு மகன் சிற்றரசு மற்றும் தொழிற்சங்க தலைவர் வி.எம்.ஆர்.சபாபதி பேத்தி எழிலரசி ஆகியோரின் திருமணம் இன்று (ஜூலை 9) நடைபெற்றது. இதற்கு தலைமையேற்று நடத்தி கொடுத்த முதலமைச்சர்

, விழாவில் பின்னர் உரையாற்றினார். அப்போது,

என்பது கொள்கை குடும்பம். தமிழகத்தில் தற்போது திராவிட மாடல் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.

மகளிர் உரிமை தொகை; முதல்வர் அதிரடி உத்தரவு !

திராவிட மாடல் ஆட்சி

ஒரு கோடி பேருக்கு 1,000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு வரும் செப்டம்பர் 15 முதல் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இப்படிப்பட்ட ஆட்சியை மத்தியில் ஆளும் பாஜக விமர்சித்து வருகிறது. இவர்கள் தேர்தலுக்கு முன்பாக அளித்த வாக்குறுதிகளில் ஏதேனும் ஒன்றை நிறைவேற்றி இருக்கிறார்களா?

கருப்பு பணம் என்னாச்சு?

ஆட்சிக்கு வந்தால் வெளிநாட்டில் உள்ள கருப்பு பணத்தை எல்லாம் மீட்டுக் கொண்டு வந்து நம்முடைய நாட்டில் உள்ள அனைவருக்கும் ஒரு நபருக்கு 15 லட்ச ரூபாய் வழங்குவோம் என்று பிரதமர் மோடி உறுதிமொழி அளித்தார். 15 லட்ச ரூபாய் அல்ல, 15 ஆயிரம் ரூபாய் வழங்கியிருக்கிறாரா? குறைந்தபட்சம் 15 ரூபாய் வழங்கியுள்ளாரா?

விவசாயிகள் நலன்

இதைப் பற்றி அவர்கள் சிந்திக்கக் கூட இல்லை. ஆண்டிற்கு 2 கோடி பேருக்கு வேலை வழங்குவோம் என்று உறுதிமொழி தந்தனர். ஆனால் இதையெல்லாம் காற்றில் பறக்கவிட்டுள்ளனர். விவசாயிகள் நலனை காப்போம் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்தவர்கள், டெல்லியில் விவசாயிகளின் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தும் அளவிற்கு கொண்டு போய் விட்டனர்.

பாட்னா எதிர்க்கட்சிகள் கூட்டம்

விவசாயிகள் சொல்லி மாளாத அளவிற்கு துயரங்களை அனுபவித்தனர். மத்தியில் ஆளும் பாஜகவால் நாட்டிற்கே பேராபத்து வந்துள்ளது. இப்படிப்பட்ட சர்வாதிகார ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதற்காக தான், எதிர்க்கட்சிகள் ஒன்று கூடி ஆலோசித்து வருகிறோம். பாட்னாவில் அனைத்து கட்சி கூட்டத்தை நிதிஷ் குமார் முன்னெடுத்தார்.

அடுத்து பெங்களூருவில்

யார் ஆட்சி இருக்கக் கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம். வரும் 17, 18 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டம் நடைபெறவுள்ளது. பாஜகவை எதிர்ப்பதால் திமுக ஆட்சிக்கே ஆபத்து வந்தாலும் கவலைப்பட வேண்டாம். நமது கொள்கை ஒன்றே என்பதை மனதில் வைத்து வரும் மக்களவை தேர்தலில் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.