
முதல் நீ முடிவும் நீ ஹீரோவின் புதிய படம்
யு-டியூபர் ஆக இருந்து முதல் நீ முடிவும் நீ படத்தின் மூலம் நடிகர் ஆனவர் கிஷான் தாஸ். தற்போது தேஜாவு பட இயக்குனர் அரவிந்த் இயக்கத்தில் தருணம் என்ற காதல் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் .
இப்போது எந்தவித அறிவிப்பும் இல்லாமல் ஒரு புதிய படத்தில் நடித்து முடித்துள்ளார் கிஷன் தாஸ். அறிமுக இயக்குனர் விகாஸ் ஆனந்த் இயக்கத்தில் கிஷான் தாஸ், மோனிகா சின்னகொட்லா, சௌந்தர்யா நந்தகுமார், நவீன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சிங்க் என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு 15 நாட்களில் முடிவடைந்துள்ளது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.