மேற்குவங்க தேர்தல் கலவரம்; சிதறிய வாக்குப் பெட்டிகள், பலியான உயிர்கள், அமித் ஷாவிற்கு பறந்த லெட்டர்!

மேற்குவங்க மாநிலத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக் காலம் நிறைவு பெற்றதை அடுத்து தேர்தல் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. நேற்றைய தினம் (ஜூலை 8) மொத்தமுள்ள 73,887 இடங்களுக்கும் ஒரேகட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதில் 5.67 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.

மேற்குவங்கத்தில் கலவரம்

இந்த சூழலில் கூச்பெஹாரில் தேர்தல் அதிகாரி கொல்லப்பட்டதாக பகீர் தகவல் வெளியானது. இதில் ஆளுங்கட்சியை சேர்ந்த ஆதரவாளர்கள் ஈடுபட்டதாக பரபரப்பாக பேசப்பட்டது. இந்த தகவல் மாநிலம் முழுவதும் தீயாய் பரவியது. மேலும் பிற அரசியல் கட்சி தொண்டர்களும் தாக்கப்பட்டதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து நடந்த மோதல் வன்முறையாக வெடித்தது. படிப்படியாக பல்வேறு நகரங்களுக்கும் பரவி மேற்குவங்க மாநிலம் முழுவதும் பரபரப்பு தொற்றி கொண்டது.

உள்ளாட்சி தேர்தலில் அதிர்ச்சி

உடனே கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர். இருப்பினும் திரிணாமூல்
காங்கிரஸ்
, இந்திய கம்யூனிஸ்ட், பாஜக, காங்கிரஸ் எனப் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த 16 பேர் வன்முறையில் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவை முர்ஷிதாபாத், கூச்பெஹார், மால்டா, 24 சவுத் பர்கானாஸ் உள்ளிட்ட பகுதிகளில் நடந்ததாக சொல்லப்படுகிறது. சில வாக்குச்சாவடிகளில் புகுந்த வன்முறையாளர்கள் வாக்குப் பெட்டிகளை தூக்கி கொண்டு ஓடினர்.

தமிழகத்தின் அடையாளமான செங்கோலை பாராளுமன்றத்தில் வைப்பது தமிழகத்திற்கும் தமிழர்களுக்கும் கிடைத்த பெருமை…..பாராளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர் திறக்க வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்கள் கூறி வருவது அரசியலாக்கும் செயல்…..

வாக்குப்பெட்டிகள் சூறையாடல்

அவற்றை உடைத்து, அதிலிருந்து வாக்குச்சீட்டுகளை சாலைகளில் சிதறவிட்டனர். மேலும் வாக்குப்பெட்டிகளை தீயிட்டும் கொளுத்தினர். இந்த வன்முறை மற்றும் உயிர் பலி சம்பவத்திற்கு ஒவ்வொரு கட்சியும் மற்ற கட்சிகளை குற்றம்சாட்டி வருகின்றன. உடனடியாக குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சியான பாஜக கேட்டுக் கொண்டுள்ளது.

தேர்தல் ஆணையர் மீது புகார்

மேலும் நிலைமையை மாநிலத் தேர்தல் ஆணையர் ராஜிவா சின்ஹா சரியாக கையாளவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு மேற்குவங்க பாஜகவினர் கடிதம் எழுதியுள்ளனர். உடனடியாக அமித் ஷா தலையிட்டு மேற்குவங்கத்தில் அமைதி நிலவ உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

அரசியல் கட்சிகள் குற்றச்சாட்டு

இதற்கிடையில் 8 பேரை பலி கொடுத்துள்ள ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி, எதிர்க்கட்சிகள் தான் வன்முறைக்கு காரணம் என்றும், மத்திய பாதுகாப்பு படை நிலைமையை சரியாக கையாளவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளது. இதேபோல் பிற கட்சிகளும் மாறி மாறி புகார்களை முன்வைத்து வருகின்றன.

22 மாவட்டங்களில் 16ல் எந்தவித கலவரங்களும் இல்லை என்று ஆளும் தரப்பு தெரிவிக்கிறது. 61 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் 60 இடங்களில் மட்டுமே வன்முறை வெடித்ததாக குறிப்பிட்டுள்ளனர். எனவே இங்கு மட்டும் மறுதேர்தல் நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.