மாட்ரிட்: ஸ்பெயின் ஜராகோசா நகரில் பெய்த கனமழை காரணமாக அந்த நகர மக்களின் இயல்பு வாழ்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “ஸ்பெயினில் ஜராகோசா நகரில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக நகரின் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. வெள்ளத்தில் ஏராளமான கார்கள் அடித்து செல்லப்பட்டன. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வெள்ளம் காரணமாக பலரும் காரினுள் சிக்கிக் கொண்டனர். இதுவரை எந்த உயிரிழப்பு ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்” என்று செய்தி வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் காரினுள் சிக்கி கொண்ட மக்களை வெள்ள நீர் அடித்துச் செல்லும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகின.வெள்ளம் காரணமாக பேரழிவை ஜராகோசா சந்திப்பிருப்பதாக அந்நகர வாசிகள் தெரிவித்துள்ளனர்.
Zaragoza, Spain pic.twitter.com/U66YJEMvg1
— Danijel Višević (@visevic) July 8, 2023
வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக ஸ்பெயினின் பேரிடர் மீட்புப் பணி குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காலநிலை மாற்றம் நம் கண் முன்னே அரங்கேறி வருகிறது. உலகெங்கிலும் லட்சக்கணக்கான வனவிலங்குகள் அவற்றின் பாதிப்பை உணர்ந்து வருகின்றன. மனிதர்களும் அதன் தீவிரத்தை கடந்த பத்து ஆண்டுகளாக எதிர்கொண்டு வருகின்றனர். இவற்றை எல்லாம் கவனத்தில் கொண்டு பூமி வெப்பமடைதலை குறைப்பதற்கான செயல்பாடுகளை விரைவாக நகர்த்த வேண்டிய சூழலில் மனித இனம் உள்ளது என்ற எச்சரிக்கையை சுற்றுச் சூழல் செயற்பாட்டாளர்கள் தொடர்ந்து எழுப்பி வருகின்றனர்.