புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நேற்று டெல்லியில் இருந்து இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவுக்கு காரில் புறப்பட்டார்.
ஹரியாணா மாநிலத்தின் சோனிபட் மாவட்டத்தில் அவர் செல்லும் போது, பல்வேறு இடங்களில் வேளாண் பணியில் ஈடுபட்டிருந்த விவசாயிகளை அவர் சந்தித்தார். மதினாகிராமத்தில் ராகுல் விவசாயிகளை சந்தித்தபோது டிராக்டர் ஓட்டினார். இதுபோல் நடவு மற்றும் விதைப்பு பணியிலும் அவர் ஈடுபட்டார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாக பரவின. ராகுல் டிராக்டர் ஓட்டியது இது முதல் முறையல்ல.
கடந்த 2021-ல் டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராகநடந்த போராட்டத்தின் போதும் அவர் டிராக்டர் ஓட்டினார்.