41 ஆண்டுகளுக்கு பிறகு கொட்டி தீர்த்த பேய் மழை… அரசு ஊழியர்களின் விடுமுறையை ரத்து செய்த முதல்வர்!

நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் டெல்லியில் நேற்று முதல் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 153 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. 1982 ஆம் ஆண்டுக்கு பிறகு ஜூலை மாதத்தில் டெல்லியில் பதிவான அதிகப்பட்ச மழை இதுதான் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தரிசனத்துக்கு இவ்ளோ நேரமா? திருப்பதியில் திடீரென அலைமோதும் கூட்டம்… என்ன காரணம்?

நேற்று 12 மணி நேரத்தில் 126 மி.மீ. மழை பெய்துள்ளது. மொத்த பருவமழை அளவில் 15 சதவீத மழை வெறும் 12 மணி நேரத்தில் பெய்தது. இதனால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியதால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். கன மழை மற்றும் வெள்ளப்பெருக்கால் தலைநகரின் முக்கிய சாலைகள் ஆறு போன்று காட்சியளிக்கின்றன. இதனால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

கனமழையால் டெல்லி திணறி வரும் நிலையில் அனைத்து துறை ஊழியர்களின் விடுமுறையை அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ரத்து செய்து, உடனடியாக பணிக்கு திரும்ப உத்தரவிட்டுள்ளார். கனமழையால் குருகிராம் பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. குடியிருப்புகளையும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்… கொட்டித் தீர்க்கும் கனமழை… இந்திய வானிலை மையம் எச்சரிக்கை!

வெள்ளம் பாதித்த பகுதிகளில் அமைச்சர்களும் அதிகாரிகளும் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர். கனமழையால் மெட்ரோ ரயில் நிலையங்கள், பூங்காக்கள், பேருந்து நிலையங்கள், சுரங்கப்பாதைகள் மற்றும் மருத்துவமனை வளாகங்கள் கூட நீரில் மூழ்கியுள்ளன. நகரின் பல்வேறு பகுதிகளிலும் முழங்கால் அளவுக்கு மழை நீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

கனமழையால் டெல்லியின் ஜாகிரா பகுதியில் வீடு ஒன்று இடிந்து விழுந்தது. இதில் இரண்டு பேர் காயமடைந்தனர். இதனிடையே இன்னும் இரண்டு நாட்களுக்கு டெல்லியில் கன மழை நீடிக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் இன்று மிதமான மழைக்கான மஞ்சள் எச்சரிக்கையையும் விடுத்துள்ளது இந்திய வானிலை மையம்.

மக்களிடையே பணப்புழக்கம் அதிகமாக உள்ளது… விலைவாசி உயர்வால் சிரமப்படவில்லை… அமைச்சர் சர்ச்சை பேச்சு!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.