பியூப்லோ-வட அமெரிக்க நாடான மெக்சிகோவில், மனைவியை கொலை செய்து, அவரது மூளையை சமைத்து சாப்பிட்ட கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மெக்சிகோவில் பியூப்லோ பகுதியைச் சேர்ந்த அல்வாரோ, 32, மரியா மாண்ட்சாரட், 38, என்பவரை ஓராண்டுக்கு முன் திருமணம் செய்தார்.
மரியாவுக்கு ஐந்து மகள்கள் உள்ள நிலையில், அவர்களையும் அல்வாரோ வளர்த்து வந்தார்.
இதற்கிடையே போதை பழக்கத்துக்கு அடிமையான இவர், சமீபத்தில் தன் மனைவியை கொடூரமாக கொலை செய்து, அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி பிளாஸ்டிக் பையில் அடைத்தார்.
பின், தன் மனைவியின் மூளையை எடுத்து, ‘சவர்மா’ போல், சமைத்து சாப்பிட்டதுடன், மண்டை ஓட்டை சிகரெட் சாம்பலை கொட்டும், ‘ஆஷ் ட்ரே’வாக பயன்படுத்தினார்.
இச்சம்பவம் நிகழ்ந்து இரு நாட்களுக்குபின், தன் வளர்ப்பு மகள்களில் ஒருவரை அழைத்து, மனைவியின் உடலை வைத்துள்ள பிளாஸ்டிக் பையை எடுத்து செல்லுமாறு கூறியுள்ளார்.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், போலீசாருக்கு தகவல் அளித்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், துண்டு துண்டாக வெட்டப்பட்ட உடலை கைப்பற்றியதுடன், அல்வாரோவையும் கைது செய்தனர்.
பின்னர் அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், சாத்தானின் சொல்லைக் கேட்டு, தன் மனைவியை கொலை செய்ததாக தெரிவித்தார்.
கைதான அல்வாரோ, மனம் நலம் பாதிக்கப்பட்ட நபர் எனவும், தன் வளர்ப்பு மகள்களுக்கு அடிக்கடி மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் தொல்லை தந்ததும் தெரியவந்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்