Jailer: காவாலா பாடல் பற்றி அனிருத் சொன்னது நடந்துடுச்சு: அருண்ராஜா காமராஜ்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் ஜெயிலர் படம் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாக உள்ளது.

உதயநிதியை பாராட்டிய பா.ரஞ்சித்…
இந்நிலையில் ஜெயிலர் படத்தின் முதல் பாடலாக காவாலா பாடலை ரிலீஸ் செய்தார்கள். ஆட்டத்திற்கு பெயர் போன தமன்னாவை ஆட வைத்து அந்த பாடலின் லிரிக்கல் வீடியோவை வெளியிட்டார்கள்.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

அனிருத் இசையில் வெளியான காவாலா பாடலுக்கு ஜானி மாஸ்டர் ஸ்டெப்ஸ் போட்டிருந்தார். அந்த பாடலை எழுதியவர் இயக்குநர் அருண்ராஜா காமராஜ்.

காவாலா பாடலை எழுதியது குறித்து அருண்ராஜா காமராஜ் கூறியதாவது,

நடனம் சார்ந்த சூழலுக்கு பாட்டு எழுத வேண்டும் என்று கூறி இசையமைப்பாளர் அனிருத் என்னை அழைத்தார். அந்த பாடலில் தெலுங்கு வார்த்தைகள் இருக்க வேண்டும் என்றார்.

அவர் சொன்னபடி பாடலில் ஆங்காங்கே தெலுங்கு வார்த்தைகளை சேர்த்தேன். அரை மணிநேரத்தில் பாடலை எழுதுக் கொடுத்தேன்.

அதை பார்த்த அனிருத்தோ, பாடல் நன்றாக வந்திருக்கிறது. கண்டிப்பாக ஹிட்டாகும் என்றார். அவர் சொன்னது போன்றே நடந்துவிடட்து.

சூப்பர் ஸ்டாரின் கபாலி படத்தில் வந்த நெருப்புடா பாடலை எழுதினேன். அந்த பாடல் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. அதன் பிறகு காலா படத்திற்கு பாட்டு எழுதினேன். தற்போது ஜெயிலரில் காவாலா பாடலை எழுதியிருக்கிறேன். சூப்பர் ஸ்டார் படத்திற்கு பாடல் எழுதியதில் மகிழ்ச்சி என்றார்.

காவாலா பாடல் வெளியானதில் இருந்து குட்டீஸ் எல்லாம் அந்த பாட்டுக்கு ஆடிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி ஒரு செல்லக்குட்டி காவாலா பாடலுக்கு டான்ஸ் ஆடிய வீடியோ சமூக வலைதளத்தில் வெளியானது. அதை பார்த்த தமன்னா, இப்படி ஒரு க்யூட்டான போட்டியை பார்த்தது இல்லை என்றார்.

இந்நிலையில் காவாலா பாடலை ஷில்பா ராவ் எப்படி பாடியிருப்பார் என ஒரு கலாய் வீடியோவும் வெளியாகியுள்ளது. அதை பார்த்தால் ரஜினியே குபீரென்று சிரித்துவிடுவார். அந்த அளவுக்கு இருக்கிறது.

ஜெயிலர் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கவில்லை. அவர் மட்டும் இசையமைத்து இந்த கலாய் வீடியோ வந்திருந்தால் பதிலுக்கு கலாய்த்து வீடியோ வெளியிட்டிருப்பார்.

முன்னதாக பத்து தல படத்தில் வந்த ராவடி பாடலை எப்படி பாட வைத்திருப்பார்கள் என வெளியான கலாய் வீடியோ ரஹ்மான் கண்ணில் பட்டது. அந்த கலாய் கோஷ்டியையே கலாய்த்து வீடியோ வெளியிட்டார் ரஹ்மான் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே சூப்பர் ஸ்டார் படத்தில் இப்படியொரு குத்துப்பாடல் தேவையா என சமூக வலைதளங்களில் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். குடும்பத்தோடு தியேட்டருக்கு சென்று இந்த பாடலை பார்க்க முடியுமா?. ஜெயிலர் ரஜினி படம். தமன்னா இப்படி குத்தாட்டம் போடாவிட்டாலும் ஹிட்டாகும்.

சூப்பர் ஸ்டாருக்கு தமன்னாவின் குத்தாட்டம் தேவையில்லை என்கிறார்கள் சமூக வலைதளவாசிகள். அதை பார்த்த ரஜினி ரசிகர்களோ, படத்தில் குத்துப்பாட்டு வருவதை எல்லாம் குறை சொல்லக் கூடாது. அந்த பாடலில் தலைவர் செம ஸ்டைலாக இருக்கிறார். அதை தான் பார்க்க வேண்டும் என்கிறார்கள்.

View this post on InstagramA post shared by 𝗢𝘁𝘁𝗮𝘁𝗵𝗮𝗸𝗸𝗮𝗹𝗶 || 𝗢𝘄𝗻 𝗠𝗲𝗺𝗲𝘀 💯 (@ottathakkali.exe)
இந்நிலையில் பலரும் காவாலா பாடலுக்கு டான்ஸ் ஆடி வீடியோ வெளியிட்டு வருகிறார்கள். காவாலாவுக்கு தமன்னா எப்படி ஆடியிருக்கிறார், ரஜினி எப்படி ஆடியிருக்கிறார் என ஒரு சிறுவன் ஆடிய வீடியோ வைரலாகிவிட்டது.

அந்த வீடியோவை பலரும் ஷேர் செய்துள்ளனர். திரும்பும் பக்கம் எல்லாம் காவாலா காவாலா என பாடிக் கொண்டிருக்கிறார்கள்.

Maaveeran:மாவீரனுக்காக வாய்ஸ் ஓவர் கொடுத்தது தனுஷ் அல்ல ‘கடவுள்’?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.