LGM – தோனி தயாரிக்கும் LGM.. எப்போ ஆடியோ வெளியீட்டு விழா தெரியுமா?

சென்னை: LGM (எல்ஜிஎம்) இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தயாரிக்கும் LGM படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனிக்கு தமிழ்நாட்டில் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். அவரும் தமிழ்நாடு தனக்கு இரண்டாம் தாய் வீடு என பலமுறை கூறியிருக்கிறார். இந்தச் சூழலில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற தோனி திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியிருக்கிறார். இதனால் தோனி ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

தோனி தயாரிக்கும் முதல் தமிழ் படம்: தோனி படம் தயாரிக்கப்போகிறார் என தெரியவந்ததும் அவர் எந்தப் படத்தை முதலில் தயாரிக்கவிருக்கிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. தமிழ்நாடு மீது தனக்கு இருக்கும் அன்பை உறுதிப்படுத்தும் விதமாக முதல் படத்தை தமிழில் தயாரிக்கிறார். தோனி என்ட்டெர்டெயின்மென்ட் தயாரிக்கும் தமிழ் படத்துக்கு லெட்ஸ் கெட் மேரிட் (LGM) என்று பெயரிடப்பட்டுள்ளது.

படத்தில் யார் யார்?: தோனி தயாரிக்கும் லெட்ஸ் கெட் மேரிட் படத்தில் ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடிக்கிறார். லவ் டுடே படத்தில் நடித்து 2கே கிட்ஸ்களின் பேவரைட்டாக இருக்கும் இவானா கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் யோகிபாபு, நதியா உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். குடும்பத்தோடு பார்க்கும் பொழுதுபோக்கு படமாக தயாராகியிருக்கிறது. ரமேஷ் தமிழ்மணி என்ற இயக்குநர் படத்தை இயக்க அவரே படத்துக்கு இசையும் அமைத்திருக்கிறார்.

ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர்: லெட்ஸ் கெட் மேரிட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை தோனி தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் அண்மையில் வெளியிட்டிருந்தார். அந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரானது ரசிகர்களிடையே வரவேற்பையும் பெற்றது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சமீபத்தில் வெளியான எல்ஜிஎம் படத்தின் டீசரும் சமூக வலைதளங்களில் லைக்ஸை குவித்தது.

ஆடியோ வெளியீட்டு விழா: இந்நிலையல் படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நாளை நடக்கிறது. இதற்காக தோனியும் அவரது மனைவி சாக்‌ஷியும் சென்னை வந்து ஆடியோவையும், ட்ரெய்லரையும் வெளியிடவிருக்கின்றனர். தோனி தயாரிக்கும் படம் என்பதால் படத்தை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

வரவேற்பைப் பெற்ற ஃபர்ஸ்ட் சிங்கிள்: இதற்கிடையே படத்தின் முதல் சிங்கிளான சலானா பாடலின் லிரிக்கல் வீடியோ கடந்த மாதம் வெளியானது. பாடலை பாடலாசிரியர் மதன் கார்க்கி பாடலை எழுத ஆதித்யா ஆர்.கே பாடியிருந்தார். பாடலுக்கு தினேஷ் மாஸ்டர் நடனம் அமைத்திருந்தார். அந்தப் பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.