வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கொழும்பு: இலங்கை அதிபர் விக்கிரமசிங்கே, அரசு முறை பயணமாக இம்மாதம் 21 ம் தேதி இந்தியா வருகிறார். அப்போது, பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையில் ஏற்பட்ட கடுமையான பொருளாார நெருக்கடி காரணமாக மக்கள் போராட்டம் வெடித்ததால், அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே, மகிந்த ராஜபக்சே உள்ளிட்டோர் பதவி இழந்தனர். பிறகு, அதிபராக ரணில் விக்கிரமசிங்கே அதிபராக பொறுப்பேற்றுள்ளார்.
அவர் பதவியேற்ற பிறகு முதல்முறையாக இந்தியா வர உள்ளார். அவருடன் அமைச்சர்கள் மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மின்சாரம் மற்றும் எரிசக்தி துறை அமைச்சர் காஞ்சனா விஜேசேகரா, வெளியுறவு விவகாரத்துறை அமைச்சர் அலி சாப்ரி உள்ளிட்டோர் உடன் வருகின்றனர்.
ரணில் விக்கிரம சிங்கேயின் பயணத்தை இறுதி செய்ய, இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் வினய்குமார் குவாத்ரா கொழும்பு சென்று ஆலோசனை நடத்த உள்ளார். ரணில், இந்தியா வருவதற்கு முன்னர் இந்திய அரசு சார்பில் செயல்படுத்தப்படும் மின்சாரம், எரிசக்தி, விவசாயம் மற்றும் கடலோர பாதுகாப்பு உள்ளிட்ட திட்டங்களை இறுதி செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement