பம்பர் (தமிழ்)

அறிமுக இயக்குநர் எம்.செல்வகுமார் இயக்கத்தில் வெற்றி, ஷிவானி நாராயணன், தங்கதுரை, கவிதா பாரதி, மதன் தக்ஷணாமூர்த்தி, ஜி.பி.முத்து உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஜூலை 7ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் திரைப்படம் `பம்பர்’.
குற்றச் செயல்களாலும் வறுமையாலும், தன் மாமா வீட்டிலும் ஊரார் முன்பும் தொடர்ந்து அவமானப்படுத்தப்படும் புலிப்பாண்டி (வெற்றி), தவிர்க்க முடியாத காரணத்தால், மாலை போட்டு சபரி மலைக்குச் செல்கிறார். அங்கே பம்பையில் லாட்டரி விற்கும் இஸ்மாயிலிடம் (ஹரீஷ் பேரடி) `பம்பர்’ லாட்டரி ஒன்றை வாங்குகிறார். அதற்குப் பின் புலிப்பாண்டி, அவரது நண்பர்கள், இஸ்மாயில் ஆகியோரின் வாழ்க்கையில் அந்த பம்பர் லாட்டரி செய்யும் குழப்பங்கள், கலவரங்கள், நன்மைகள் என்னென்ன என்பதைச் சொல்வதுதான் இதன் கதைக்களம்.
Infinity (தமிழ்)

சாய் கார்த்திக் இயக்கத்தில் நட்டி நட்ராஜ், வித்யா பிரதீப், முனிஷ்காந்த், வினோத் சாகர், ஜீவா ரவி உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஜூலை 7ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் திரில்லர் திரைப்படம் `Infinity’.
தொடர் கொலை வழக்குகளை விசாரிக்கும் சிபிஐ அதிகாரியான நட்டி, கொலைக்கானக் காரணங்களையும், கொலையாளியையும் கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதுதான் இதன் கதைக்களம்.
வில் வித்தை (தமிழ்)

‘தெரு நாய்கள்’, ‘படித்தவுடன் கிழித்து விடவும்’, ‘கல்தா’ படங்களை இயக்குநரான ஹரி உத்ரா இயக்கத்தில் அருண் மைக்கேல் டேனியல், வைஷ்ணவி, குணா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஜூலை 7ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் திரைப்படம் ‘வில் வித்தை’. குழந்தைகள் மீதான பாலியல் கொடுமைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரில்லர் திரைப்படம் இது.
ராயர் பரம்பரை (தமிழ்)

அறிமுக இயக்குநர் ராமநாத்.டி இயக்கத்தில் கிருஷ்ணா, ஆனந்த ராஜ், கஸ்தூரி, சரண்யா, மனோபாலா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ராயர் பரம்பரை’. இத்திரைப்படம் கடந்த ஜூலை 7ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
காதல் மீது தீவிர வெறுப்பில் இருக்கும் கதாநாயகிக்கும், ‘காதலர்களைக் கண்டதும் பிரித்துவிடும் கட்சி’யின் பொதுச் செயலாளராக ஜாலியாகத் திரியும் கதாநாயகனுக்கும் ஏற்படும் மோதல், பின்னர் காதலாக மாறி இருவரும் திருமணம் செய்து கொண்டர்களா, இல்லையா என்பதுதான் இதன் கதைக்களம்.
காடப்புறா கலைக்குழு (தமிழ்)

முனிஷ்காந்த், காளி வெங்கட், மைம் கோபி ஆகியோர் இதில் நடித்துள்ளனர். கலைக்குழுவை நடத்தும் பாவாடைசாமி (முனீஸ்காந்த்) தன் குழுவில் இருக்கும் நடனப் பெண்கள் பற்றி ஊரில் இருக்கும் சிலர் ஆபாசமாக சமூக வலைதளங்களில் பதிவிடுவதையும், மோசமாக நடத்தப்படுவதையும் கண்டிக்க வேண்டும் என்று ஊர்த் தலைவரிடம் நியாயம் கேட்டுச் செல்கிறார். ஆனால், ஊர்த் தலைவர் இதற்குக் குரல் கொடுக்க முன்வர மாட்டார் என்பதை ஒரு கட்டத்தில் அறிந்து கொள்கிறார்.
அதனால், அவரைத் தேர்தலில் தோற்கடிக்க எதிரணியில் இருந்து தேர்தல் களத்தில் செயல்படுகிறார். பாவாடைசாமிக்கும் அவரது கலைக்குழுவைச் சேர்ந்தப் பெண்களுக்கும் நியாயம் கிடைத்ததா, இல்லையா… ஊர்த் தலைவருக்கும் பாவாடை சாமிக்கும் நடந்த போட்டியில் பாவாடைசாமி வெற்றிப் பெற்றாரா, இல்லையா என்பதுதான் இதன் கதைக்களம்.
Rangabali (தெலுங்கு)

பவன் பாசம்செட்டி இயக்கத்தில் ஆர்.சரத்குமார், ஷைன் டாம் சாக்கோ, யுக்தி தரேஜா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Rangabali’. லோக்கலாக இருக்கும் கதாநாயகன், டாக்டர் படிக்கும் கதாநாயகி இருவருக்குமான காமெடி ரொமான்டிக் காதல்தான் இதன் கதைக்களம். இத்திரைப்படம் கடந்த ஜூலை 7ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
Bhaag Saale (தெலுங்கு)

பிரனீத் பிரமாண்டப்பள்ளி இயக்கத்தில் ஸ்ரீ சிம்ஹா கோடூரி, நேஹா சோலங்கி, ராஜீவ் கனகலா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Bhaag Saale’. காமெடி, க்ரைம் திரில்லர் திரைப்படமான இது கடந்த ஜூலை 7ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
Neeyat (இந்தி)

அனு மேனன் இயக்கத்தில் வித்யா பாலன், ராம் கபூர், ராகுல் போஸ் உருவாகியுள்ள திரைப்படம் ‘Neeyat’. நாடு கடத்தப்பட்ட கோடீஸ்வரர் ஆஷிஷ் கபூரின் பிறந்தநாள் விடுமுறையில் ஒரு மர்மமான கொலை நடக்கிறது. அதன் மர்மப்பின்னணி என்ன என்பதே இதன் கதைக்களம். க்ரைம் திரில்லர் திரைப்படமான இது கடந்த ஜூலை 7ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
Insidious: The Red Door (ஆங்கிலம்)

பேட்ரிக் வில்சன் இயக்கத்தில் டை சிம்ப்கின்ஸ், பேட்ரிக் வில்சன், ரோஸ் பைரன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள் ஹாலிவுட் திரைப்படம் ‘Insidious: The Red Door’. ஹாரர், திரில்லர் திரைப்படமான இது கடந்த ஜூலை 7ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
இந்த வார ஓடிடி ரிலீஸ்கள்…
Rudramambapuram (தெலுங்கு) – Amazon Prime Video

மகேஷ் பாண்டு இயக்கத்தில் ராஜ்சேகர் அனிங்கி, வம்சிதர் சாகர்லமுடி, பிரமீளா தேவி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Rudramambapuram’. இரண்டு மீனவர்களுக்கிடையே நடக்கும் மோதல்கள் மற்றும் அதற்கிடையில் நடக்கும் அரசியல் சூழ்ச்சிகள் ஆகியவையே இதன் கதைக்களம். ஆக்ஷன், திரில்லர் திரைப்படமான இது ‘Amazon Prime Video’ ஓடிடி தளத்தில் கடந்த ஜூன் 7ம் தேதி வெளியாகியுள்ளது.
Tarla (இந்தி) – Zee5

பியூஷ் குப்தா இயக்கத்தில் பாரதி அச்ரேக்கர், பூர்ணேந்து பட்டாச்சார்யா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Tarla’. தர்லா தலால் என்ற பிரபல பெண் செஃப்பின் வாழ்வில் நடந்த சுவராஸ்யமான சம்பவங்கள்தான் இதன் கதைக்களம். இத்திரைப்படம் ‘Zee5’ ஓடிடி தளத்தில் கடந்த ஜூலை 7ம் தேதி வெளியாகியுள்ளது.
Blind (இந்தி) – Jio Cinema

ஷோம் மகிஜா இயக்கத்தில் சோனம் கபூர், லூசி ஆர்டன், லில்லெட் துபே உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Blind’. விபத்தில் பார்வையை இழக்கும் சோனம் கபூர், ஒரு மிகப்பெரிய க்ரைமில் மாட்டிக்கொள்கிறார். அதிலிருந்து மீண்டு எவ்வாறு அவரது வாழ்வை எதிர்கொண்டார் என்பதே இதன் கதைக்களம். க்ரைம், திரில்லர் திரைப்படமான இது ‘Jio Cinema’ ஓடிடி தளத்தில் கடந்த ஜூலை 7ம் தேதி வெளியாகியுள்ளது.
Gold Brick (பிரெஞ்சு) – Netflix

ஜெர்மி ரோசன் இயக்கத்தில் ரபேல் க்வெனார்ட், இகோர் கோட்ஸ்மேன், அகதே ரூசெல்லே உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள பிரெஞ்சு மொழி திரைப்படம் ‘Gold Brick’. தொழிற்சாலலையில் பெரிதாகச் சம்பளம் இல்லாத தொழிலாளி தனது முதலாளியை லாகவமாகப் பயன்படுத்தி வாசனைப் பொருள்கள் தயாரிக்கும் தொழில் மூலம் எப்படிப் பணக்காரன் ஆனான் என்பதே இதன் கதைக்களம். இத்திரைப்படம் ‘Netflix’ ஓடிடி தளத்தில் கடந்த ஜூலை 6ம் தேதி வெளியாகியுள்ளது.
இந்த வார வெப்சீரிஸ்கள்…
Sweet Kaaram Coffee (தமிழ்) – Amazon Prime video

ரேஷ்மா கட்டாலா இயக்கத்தில் லட்சுமி, மது, சாந்தி பாலச்சந்திரன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள வெப்சீரிஸ் இந்த ‘Sweet Kaaram Coffee’. வெவ்வேறு குழப்பங்களையும், பிரச்னைகளையும் கொண்டுள்ள மூன்று தலைமுறை பெண்கள் காரில் பயணம் செல்கிறார்கள். அந்தப் பயணத்தில் அவர்களின் குழப்பங்களுக்கும் பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைத்ததா, இல்லையா என்பதுதான் இதன் கதைக்களம். இந்த வெப்சீரிஸ் ‘Amazon Prime video’ ஓடிடி தளத்தில் கடந்த ஜூலை 7ம் தேதி வெளியாகியுள்ளது.
Adhura (இந்தி) – Amazon Prime video

அனன்யா பானர்ஜி, கவுரவ் கே. சாவ்லா இயக்கத்தில் இஷ்வாக் சிங், ரசிகா துகல், ஷ்ரேனிக் அரோரா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்தி வெப்சீரிஸ் ‘Adhura’. ஹாரர், திரில்லர் நிறைந்த வெப்சீரிஸான இது ‘Amazon Prime video’ ஓடிடி தளத்தில் கடந்த ஜூலை7ம் தேதி வெளியாகியுள்ளது.
Kizazi Moto: Generation Fire (ஆங்கிலம்) – Disney+ Hotstar

கான்யிஸ்வா ஜாயி, லுங்குலேத்து மென்சி, நோம்சா வின்னி கோரோ நடிப்பில் உருவாகியுள்ள அனிமேஷன் வெப்சீரிஸ் ‘Kizazi Moto: Generation Fire’. ஆக்ஷன், அட்வன்சர் நிறைந்த இந்த வெப்சீரிஸ் கடந்த ஜூலை 5ம் தேதி ‘Disney+ Hotstar’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
The Horror of Dolores Roach (English) – Amazon Prime video

ஹிரோமி கமதா, எட்வர்டோ சான்செஸ், அமெரிக்கா யங், ரோக்சன் டாசன் ஆகியோர் இயக்கத்தில் ஜஸ்டினா மச்சாடோ, அலெஜான்ட்ரோ ஹெர்னாண்டஸ், கே. டாட் ஃப்ரீமேன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள வெப்சீரிஸ் ‘The Horror of Dolores Roach’. காமெடி, ஹாரர் நிறைந்த இந்த வெப்சீரிஸ் ‘Amazon Prime video’ ஓடிடி தளத்தில் கடந்த ஜூலை 7ம் தேதி வெளியாகியுள்ளது.
Fatal Seduction (English) – Netflix

ஜானி பார்புசானோ, ந்தபிசெங் மொகோனா, ஜூகோ நோடாடா ஆகியோர் இயக்கத்தில் ஃபிரான்சஸ் ஷோல்டோ-டக்ளஸ், என்கெலேகன்யோ ரமுலோண்டி, ரிசெல்லே ஜானுக் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள வெப்சீரிஸ் ‘Fatal Seduction’. ஜாலியாக சுற்றுலா செல்லும் பெண், அங்கு பெரும் சிக்கலில் மாட்டிக் கொள்கிறார். அதிலிருந்து அவர் எப்படி மீண்டார் என்பதே இதன் கதைக்களம்.
The Lincoln Lawyer S2 (English) – Netflix

2022ம் ஆண்டும் வெளியான ‘The Lincoln Lawyer’ வெப்சீரிஸின் இரண்டாம் சீசன் இது. டெட் ஹம்ப்ரி, டேவிட் கெல்லி ஆகியோர் இயக்கத்தில் மானுவல் கார்சியா-ருல்ஃபோ, பெக்கி நியூட்டன், அங்கஸ் சாம்ப்சன் உல்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த வெப்சீரிஸ் ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
தியேட்டர் டு ஓடிடி
Good Night (Tamil) – Disney+ Hotstar

விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் மணிகண்டன், மீத்தா ரகுநாத், ரமேஷ் திலக், பகவதி பெருமாள், பாலாஜி சக்திவேல் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Good Night’. திரையரங்குகளில் வெளியாகியிருந்த இத்திரைப்படம் ‘Disney+ Hotstar’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
ஃபர்ஹானா (தமிழ்) – SonyLIV

நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், செல்வராகவன், ஐஸ்வர்யா தத்தா, ஜித்தன் ரமேஷ், அனுமோல் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஃபர்ஹானா’. திரையரங்குகளில் வெளியாகியிருந்த இத்திரைப்படம் ‘SonyLIV’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
டக்கர் (தமிழ்) – Netflix

கார்த்திக் ஜி. க்ரிஷ் இயக்கத்தில் சித்தார்த், யோகி பாபு, அபிமன்யு சிங் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டக்கர்’. பணத்தால் மட்டுமே இந்த உலகில் மரியாதையுடன் வாழ முடியும் என்று நம்பும் இளைஞர், தன் வாழ்வில் எந்த மாதிரியான பிரச்னைகளை எதிர்கொள்கிறார் என்பதே இதன் கதைக்களம். திரையரங்குகளில் வெளியாகியிருந்த இத்திரைப்படம் ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் (தமிழ்) – Zee5

கொம்பன், தேவராட்டம், விருமன் படங்களின் இயக்குநர் முத்தையாவின் அடுத்த படம் ‘காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’. ஆர்யா, சித்தி இத்னானி, பிரபு, பாக்யராஜ், சிங்கம்புலி மற்றும் சின்னத்திரை நடிகை ஹேமா தயாள் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். திரையரங்குகளில் வெளியாகியிருந்த இத்திரைப்படம் ‘Zee5’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
3:33 (தமிழ்) Aha – July 7

நம்பிக்கை சந்துரு இயக்கத்தில் மைம் கோபி, சாண்டி மாஸ்டர், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகியிருந்த ஹாரர், க்ரைம் திரைப்படமான ‘3:33’, தற்போது ‘Aha’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
IB71 (இந்தி) – Hotstar

சங்கல்ப் ரெட்டி, லீ விட்டேக்கர் இயக்கத்தில் அனுபம் கெர், வித்யுத் ஜம்வால், பிஜாய் ஆனந்த் நடிப்பில் வெளியான ஆக்ஷன், திரில்லர் திரைப்படமான ‘IB71’, தற்போது ‘Disney+ Hotstar’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
Babylon (English) – Amazon Prime Video

டேமியன் சாசெல் இயக்கத்தில் பிராட் பிட், மார்கோட் ராபி, ஜீன் ஸ்மார்ட் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான காமெடி, டிராமா திரைப்படமான ‘Babylon’, தற்போது ‘Amazon Prime Video’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
The Pope’s Exorcist (English) Netflix – July 7

ஜூலியஸ் ஏவரி இயக்கத்தில் ரஸ்ஸல் குரோவ், டேனியல் சோவட்டோ, அலெக்ஸ் எஸ்ஸோ உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ஹாரர் திரில்லர் திரைப்படமான ‘The Pope’s Exorcist’ தற்போது ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.