கொழும்பிலிருந்து காங்கேசன்துறை வரையான புகையிரத சேவையின் அனுராதபுரத்திலிருந்து புகையிரதப் பாதைகள் திருத்தப் பணிகளுக்காக சேவைகள் நிறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தொடர்ச்சியான அவதானிப்பு செலுத்தப்பட்டுவந்த நிலையில் தற்போது தண்டவாள திருத்தப்பணிகள் நிறைவு பெற்றுள்ளதைத் தொடர்ந்து நேற்று (09) வெள்ளோட்ட பயணம் நடைபெற்றது.
இதற்கமைய இன்னும் இரண்டு வாரத்திற்குள் வடக்குக்கான புகையிரத சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.