சீன கிண்டர்கார்டன் பள்ளியில் சரமாரி கத்திகுத்து… குழந்தைகள் உள்ளிட்ட பலர் பலி!

சீனாவின் தென்கிழக்கு மாகாணமாக குவாங்டாங் உள்ளது. இங்குள்ள லியான்ஜியாங் நகரில் செயல்பட்டு வரும் கிண்டர்கார்டன் பள்ளியில் ஏராளமான குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை 25 மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் திடீரென உள்ளே நுழைந்துள்ளார். இவரது பெயர் வூ எனச் சொல்லப்படுகிறது.

ஒரே நாளில் 2 வயது குறைப்பு ..தென் கொரியா அரசு அறிவிப்பு

சீனாவில் பயங்கரம்

இவர் தான் கொண்டு வந்த கத்தியை எடுத்து அங்கிருந்தவர்களை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்து 6 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் 3 குழந்தைகள், ஒரு ஆசிரியர், இரண்டு பெற்றோர் ஆவர். இதுபற்றி தகவலறிந்து வந்த போலீசார் குற்றவாளியை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

பூமியை தாக்க வரும் டபுள் சூரிய புயல்… காத்திருக்கும் ஆபத்து… நாசா விடுத்துள்ள எச்சரிக்கை!

தொடர் கதையாகும் தாக்குதல்

இந்த சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் என்று போலீசார் கூறியுள்ளனர். இது சீனா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தின் பின்னணி குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

சீனாவில் நடந்த தாக்குதல் சர்வதேச அளவிலும் தலைப்பு செய்தியாக மாறியுள்ளது. அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு, தாக்குதல் சம்பவங்கள் தொடர் கதையாகி வருகின்றன.

மோசமான நிகழ்வு

ஐரோப்பாவிலும் இத்தகை சம்பவங்களை பார்க்க முடிந்தது. இதுபோல் சீனாவிலும் அசம்பாவித சம்பவங்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளில் நடந்த தாக்குதல் சம்பவங்களில் இதுவே மோசமாக நிகழ்வு என்று கூறுகின்றனர்.

2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜியாங்ஜி மாகாணத்தில் உள்ள கிண்டர்கார்டனில் நடந்த தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். 6 பேர் காயமடைந்தனர்.2021 ஏப்ரலில் குவாங்ஜி ஸுவாங் மாகாணத்தில் உள்ள பெய்லியூ நகரில் நடந்த தாக்குதலில் 2 குழந்தைகள் கொல்லப்பட்டனர். 16 பேர் காயமடைந்தனர்.2018 அக்டோபர் சாங்குயிங்கில் உள்ள கிண்டர்கார்டனில் நடந்த தாக்குதலில் 14 குழந்தைகள் காயமடைந்தனர்.
ஆபத்தான கொத்து குண்டுகளை உக்ரைனுக்கு வழங்கும் அமெரிக்கா… உச்சக்கட்ட பதற்றம்!

அவசரகால ட்ரில்கள்

இவ்வாறு கல்வி நிலையங்களை குறிவைத்து நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களால் சீனாவில் கலக்கம் நிலவி வருகிறது. இதனை எதிர்கொள்ளும் வகையில் அவசரகால ட்ரில்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்கள் நலனை பாதுகாக்க உள்ளூர் மக்களும் கைகோர்த்து செயல்பட அழைப்பு விடுக்கப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.