தாதியர் சேவைக்காக மேலும் 3315 மாணவர் தாதியர்களாக இணைத்துக் கொள்ள சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
தெரிவு செய்யப்பட்ட குழுவிற்கான ஆட்சேர்ப்பு கடிதங்கள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவினால் உத்தியோகபூர்வமாக அமைச்சில் இன்று (10) காலை வழங்கப்படவுள்ளது.
இதற்கமைய கொழும்பு மாவட்டத்தில் நியமனம் பெற்ற குழுவொன்றிற்கு அமைச்சர் ஆட்சேர்ப்பு கடிதங்களை வழங்கி வைப்பதுடன், ஏனைய மாணவர்களுக்கும் இன்று (10) நியமனக் கடிதங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த தாதியர் மாணவர்களுக்கு நாடளாவிய ரீதியில் உள்ள 15 தாதியர் பாடசாலைகளில் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.