லாகூர்,
பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணம் ஜீலம் நகரில் பிரபல ஓட்டல் உள்ளது. 3 மாடிகளை கொண்ட இந்த ஓட்டலில் இன்று எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் அடுக்குமாடி ஓட்டல் இடிந்து விழுந்தது. மேலும், ஓட்டலில் தீ பற்றி எரிந்தது. இந்த விபத்து குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.
ஆனால், இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும், 10 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :