விலைவாசி உயர்வுக்கு குட்பை… வீடு தேடி வரும் காய்கறிகள்… மு.க.ஸ்டாலின் பலே பிளான்!

தமிழகத்தில் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு பருவமழை ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. குறிப்பாக தக்காளியின் விலை 130 ரூபாயை தாண்டிவிட்டது. இதேநிலை தான் மற்ற காய்கறிகளுக்கும். இந்நிலையில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்துவது தொடர்பாக தலைமை செயலகத்தில் முதலமைச்சர்

தலைமையில் இன்று காலை ஆலோசனை நடைபெற்றது.

ரேஷன் கடைகளில் தக்காளி? அமைச்சர் பெரியகருப்பன் அறிவிப்பு!

மு.க.ஸ்டாலின் ஆலோசனை

இதில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன், தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஐஏஎஸ் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உழவர் சந்தையில் காய்கறிகளின் விலையை அதிகப்படுத்த வேண்டும்.

நடமாடும் காய்கறி கடைகள்

மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சிகளில் நடமாடும் காய்கறி கடைகளை அமைக்கவும் அறிவுறுத்தினார். முன்னதாக கொரோனா காலத்தில் மக்கள் சிரமப்படக் கூடாது என்பதற்காக நடமாடும் காய்கறி கடைகள் அதிக அளவில் நடைமுறைப்படுத்தப்பட்டன.

வீடு தேடி செல்லும் காய்கறிகள்

இதில் குட்டி யானை எனப்படும் டாடா வாகனம் ஈடுபடுத்தப்பட்டதை பலரும் பார்த்திருப்போம். வீடு தேடி வந்து காய்கறி விற்பனை நடைபெற்றதால் பொதுமக்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருந்தது. கொரோனா நெருக்கடி காலகட்டத்திற்கு பின்னர் நடமாடும் காய்கறி கடைகளை பார்க்க முடியவில்லை.

தொழில்முனைவோர்களுக்கு வாய்ப்பு

இந்நிலையில் அதேபோன்று தற்போது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதில் மாநிலம் முழுவதும் உள்ள தொழில்முனைவோர்களுக்கு குறிப்பிட்ட அளவு நிதி ஒதுக்கி ஆக்கப்பூர்வமான முறையில் பயன்படுத்தி கொள்ள வாய்ப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரேஷன் கடைகள் மூலமும் விற்பனை

மேலும் நியாய விலைக் கடைகள், உழவர் சந்தைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனையை அதிகரிக்கவும் அறிவுறுத்தினார். இந்த கூட்டத்தில் இஞ்சி, சின்ன வெங்காயம், பருப்பு வகைகளின் விலையும் உயர்ந்துள்ளது பற்றி ஆலோசிக்கப்பட்டது.

பருப்பு விலையை கட்டுப்படுத்த அறிவுறுத்தல்

குறிப்பாக அமுதம் அங்காடிகள், நியாய விலைக் கடைகள் உள்ளிட்டவற்றின் மூலம் குறைந்த விலையில் பருப்பு வகைகளை விற்பது பற்றி அறிவுரைகள் வழங்கப்பட்டன. இத்தகைய நடவடிக்கைகள் மூலம் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி கட்டுக்குள் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.