Indian 2: இந்தியன் 2 சூட்டிங்கில் கமலை இயக்கிய அறிவழகன்.. ஸ்வீட் பிறந்தநாள் கிப்ட்!

சென்னை: நடிகர் கமல்ஹாசன், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், சித்தார்த் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துவரும் படம் இந்தியன் 2.

இந்தப் படத்தின் சில பேட்ச் வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சூட்டிங்கில் கமலும் பங்கேற்றுள்ளார்.

இந்தப் படம் அடுத்த ஆண்டில் பொங்கல் ரிலீசாக வெளியாகவுள்ள நிலையில் அதற்கான வேலைகள் தற்போது முடுக்கி விடப்பட்டுள்ளன.

இந்தியன் 2 படத்திற்காக கமல்ஹாசனை இயக்கிய இயக்குநர் அறிவழகன்: நடிகர் கமல்ஹாசன், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், சித்தார்த் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துவரும் படம் இந்தியன் 2. இந்தப் படத்தின் முதல் பாகத்திற்கு வருடங்கள் கடந்தும் சிறப்பான வரவேற்பு இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போது மீண்டும் ஷங்கர் -கமல் கூட்டணி இந்தியன் 2 படத்தில் இணைந்துள்ளது. கடந்த 2018ம் ஆண்டில் துவங்கப்பட்ட இந்தப் படத்தின் சூட்டிங் இடையில் நிறுத்தப்பட்ட நிலையில், கடந்த ஆண்டில் மீண்டும் துவங்கப்பட்டது.

முன்னதாக ஷங்கர், ராம்சரணின் கேம் சேஞ்சர் படத்தில் கமிட்டான நிலையில், லைகாவுடன் இருந்துவந்த மனக்கசப்புகள் பேசி தீர்க்கப்பட்டதை தொடர்ந்து மீண்டும் இந்தியன் 2 சூட்டிங்கை துவங்கினார். இரண்டு படங்களின் சூட்டிங்கையும் ஒரே நேரத்தில் நடத்தினார் ஷங்கர். இந்நிலையில் இரண்டு படங்களின் சூட்டிங்கும் நிறைவு கட்டத்தை அடைந்துள்ளது. இந்தியன் 2 படத்தின் சூட்டிங் விரைவில் முடியவுள்ள நிலையில், படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் முடுக்கிவிடப்பட உள்ளன.

இந்தப் படம் 2024 பொங்கல் ரிலீசுக்கு திட்டமிடப்பட்டு வருகிறது. இதையொட்டியே தற்போது படத்தின் அடுத்தடுத்த கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் படத்தை முடித்துவிட்டு கமல், பிரபாசின் ப்ராஜெக்ட் கே படத்தின் சூட்டிங்கில் இணையவுள்ளார். இந்தப் படத்தில் அவர் வில்லனாக நடிக்க கமிட்டாகியுள்ளார். சில தினங்கள் மட்டுமே இந்தப் படத்திற்காக அவர் கால்ஷீட் கொடுத்துள்ளார். இதற்காக அவருக்கு 150 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தப் படத்தை தொடர்ந்த ஹெச் வினோத் இயக்கத்திலும் தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்திலும் நடிக்க கமல் கமிட்டாகியுள்ள நிலையில், தற்போது இந்தியன் 2 படத்தின் இறுதிக்கட்ட சூட்டிங்கில் பங்கேற்றுள்ளார். இதனிடையே கடந்த வாரத்தில் இந்தப் படத்தின் சூட்டிங் தலக்கோணத்தில் நடைபெற்றதாகவும் ஆனால் இந்தக் காட்சிகளை ஷங்கர் படம்பிடிக்காமல், ராம்சரணின் படத்திற்காக பிரம்மானந்தத்தின் காட்சிகளை இயக்க சென்றுவிட்டதாக கூறப்பட்டுள்ளது.

இதனிடையே தலக்கோணத்தில் இளமையான கமலின் ஆக்ஷன் காட்சிகள் படம் பிடிக்கப்பட்டதாகவும் அந்த காட்சிகளை இயக்குநர் அறிவழகன் படமாக்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அன்றைய தினம் அறிவழகனின் பிறந்தநாள் பரிசாக ஷங்கர், கமலை இயக்கும் வாய்ப்பை தனது சிஷ்யனுக்கு கொடுத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. எது எப்படியோ கமலை இயக்குவது என்பது எளிதான விஷயம்தான் என்றும் அவரே தன்னுடைய கேரக்டரை உணர்ந்து அதற்கான நடிப்பை கொடுத்துவிடுவார் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.