Italys former PM Silvio Berlusconi leaves 33-year-old girlfriend with over ₹900 crore | 33 வயது காதலிக்கு ரூ.900 கோடி சொத்து: உயில் எழுதி வைத்த 86 வயது இத்தாலி மாஜி பிரதமர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

ரோம்: இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி, 86 வயதில் இறந்தார். இவரது 33 வயதான காதலிக்கு தனது ரூ.900 கோடி மதிப்பிலான சொத்தை உயில் எழுதி வைத்துள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளன.

இத்தாலி நாட்டின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி கடந்த ஜூன் மாதம் தனது 86வது வயதில் காலமானார். சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்த சில்வியோ பெர்லுஸ்கோனிக்கு கூடுதலாக புற்றுநோய் தாக்குதலால் நுரையீரல் நோய்த்தொற்றும் ஏற்பட்டது.

இதற்காக தீவிர மருத்துவ சிகிச்சையில் இருந்து வந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த ஜூன் 12ம் தேதி அவர் இறந்தார். இந்நிலையில் அவர், தன்னுடைய ரூ.906 கோடி மதிப்புடைய சொத்தை தனது 33 வயது காதலிக்கு உயில் எழுதி வைத்திருக்கும் தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது.

கடந்த 2020ல் பாசினா பெர்லுஸ்கோனி என்ற பெண்ணுடன் டேட்டிங் செய்யத் துவங்கிய சில்வியோ பெர்லுஸ்கோனி, கடந்த ஆண்டு முதல் அப்பெண்ணுடன் சேர்ந்து வாழ்ந்தார். இச்சூழலில்தான் மறைந்த சில்வியோ பெர்லுஸ்கோனி தன்னுடைய 100 மில்லியன் யூரோ (இந்திய மதிப்பில் ரூ.906 கோடி) மதிப்புடைய சொத்தை தனது காதலி பாசினா பெர்லுஸ்கோனிக்கு உயில் எழுதி வைத்துள்ளார்.

latest tamil news

அவரது மூத்த பிள்ளைகளான மெரினா மற்றும் பியர் சில்வியோ ஆகிய இருவரும் சில்வியோ பெர்லுஸ்கோனி பார்த்துவந்த வணிகத்தை கவனிப்பார்கள். மேலும் பெர்லுஸ்கோனியின் வணிகமற்ற சொத்தில் 60 சதவீதம், அவரது முதல் திருமணத்தில் பிறந்த மெரினா மற்றும் பியர் சில்வியோவுக்கும், மீதமுள்ள 40 சதவீத சொத்து அவரது இரண்டாவது திருமணத்தில் பிறந்த பார்பரா, எலியோனோரா மற்றும் லூய்கி ஆகியோருக்கும் பிரித்து கொடுக்கப்பட உள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.