மும்பை: Jawan Trailer (ஜவான் ட்ரெய்லர்) ஜவான் படத்தில் விஜய் கேமியோ ரோலில் நடிக்கிறார் என ஏற்கனவே தகவல் வெளியான சூழலில் தற்போது ஜவான் ட்ரெய்லரில் எடுக்கப்பட்டிருக்கும் ஸ்க்ரீன் ஷாட் ட்ரெண்டாகியுள்ளது.
தமிழில் ஆர்யா, விஜய்யை வைத்து படங்கள் இயக்கிய அட்லீ இப்போது ஹிந்தியில் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கிவருகிறார். இதில் நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகிபாபு, ப்ரியாமணி, தீபிகா படுகோனே உள்ளிட்டோர் நடிக்கின்றனர். உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர். 2021ஆம் ஆண்டே படத்தின் பணிகள் தொடங்கப்பட்டாலும் சில காரணங்களால் படப்பிடிப்பு முடிவதில் தாமதம் ஏற்பட்டது.
படம் எப்போது ரிலீஸ்: இந்தச் சூழலில் படத்தின் ஷூட்டிங் முடிந்து செப்டம்பர் 7ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. படத்தை ஷாருக்கானின் மனைவி கௌரி கான் தயாரித்திருக்கிறார். முதலில் ஜூன் இரண்டாம் தேதி ரிலீஸாவதாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட சூழலில் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகும் என நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ட்ரெய்லர் ரிலீஸ்: அதன்படி இன்று காலை 10.30 மணிக்கு ட்ரெய்லர் வெளியானது. ட்ரெய்லரை பார்க்கும்போது படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் பேக்கேஜாக உருவாகியிருப்பது உறுதியாகிறது. அதேபோல் ஷாருக்கான் இந்தப் படத்தில் ஹீரோவா இல்லை நெகட்டிவ் ஷேடில் நடிக்கிறாரா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. மேலும் நயன்தாரா, ப்ரியாமணி என பலரும் ஆக்ஷனில் பின்னி எடுத்திருக்கிறார்கள். ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் ஏகத்துக்கும் கொண்டாடிவருகின்றனர்.
விமர்சனம்: ட்ரெய்லர் எவ்வளவுக்கு எவ்வளவு கொண்டாடப்படுகிறதோ அதேபோல் விமர்சனங்களும் எழ ஆரம்பித்திருக்கின்றன. எப்போதும் பிற படத்தின் காட்சிகளை தன் படத்தில் அட்லீ வைப்பார் என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்ட சூழலில் ஜவான் ட்ரெய்லரிலும் அதுபோன்ற குற்றச்சாட்டை ரசிகர்கள் வைக்க ஆரம்பித்திருக்கின்றனர். அதாவது ட்ரெய்லரில் குழந்தையை தூக்கும் காட்சி பாகுபலியைப் போல் இருக்கிறது, அம்மாவுக்கு செய்த சத்தியம் என்று வசனம் வரும்போது கேஜிஎஃப் நினைவுக்கு வருகிறது என்றெல்லாம் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர் ரசிகர்கள்.

கேமியோ ரோலில் விஜய்?: இந்நிலையில் ஜவான் படத்தில் விஜய் கேமியோ ரோலில் நடிக்கிறார் என தகவல் வெளியானது. ஆனால் அதில் உண்மை இல்லை என்று கூறப்பட்டது. தற்போது ஜவான் ட்ரெய்லரில் ஒரு சண்டைக் காட்சியில் விஜய் உருவத்தை போன்றே ஒரு உருவம் தெரிகிறது. அதை பார்த்த ரசிகர்கள் ஒருவேளை விஜய் ஜவானில் கேமியோ ரோலில் நடித்திருக்கிறாரோ என்ற கேள்வியை எழுப்பி அந்த ஸ்க்ரீன் ஷாட்டை சமூக வலைதளங்களில் பகிர்ந்துவருகின்றனர்.
படத்தின் வியாபாரம்: முன்னதாக ஜவான் படத்தின் வியாபாரம் குறித்த தகவல் வெளியாகி ஒட்டுமொத்த பாலிவுட்டையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. அதன்படி படத்தின அடியோ உரிமத்தை டி சீரிஸ் நிறுவனம் சுமார் 36 கோடி ரூபாய்க்கு பெற்றிருப்பதாக கூறப்பட்டது. அதேபோல் படத்தின் டிஜிட்டல், சாட்டிலைட் உரிமை 250 கோடி ரூபாய்க்கு விற்றிருப்பதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.