Kaavaalaa: விதவிதமாக எடிட் செய்யப்படும் `காவாலா' பாடல்; தமன்னாவின் க்யூட்டான ட்வீட்கள்!

தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிப் படங்களில் நடித்து வருபவர் நடிகை தமன்னா.

தனது ஆரம்பக் காலங்களில் உச்சத்திலிருந்த தமன்னா, சமீபகாலமாக மிகக் குறைந்த அளவிலான படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். அந்த வகையில் அண்மையில் அவர் நடிப்பில் வெளியான ‘Jee Karda’, ‘Lust Stories 2’ ஆகிய ஓ.டி.டி படைப்புகள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றிருந்தன. இதனால் கடந்த சில நாள்களாகவே சமுக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் இருந்தார்.

‘காவாலா’ பாடல்

இதையடுத்து தற்போது, ரஜினிகாந்த் நடித்திருக்கும் `ஜெயிலர்’ படத்தின் `காவாலா’ பாடல் வெளியாகி சமூக வலைதளத்தையும் தனது ரசிகர்களையும் மீண்டும் ஈர்த்திருக்கிறார் தமன்னா.

இப்பாடல் பல மில்லியன் பார்வையாளர்களைத் தாண்டி ஹிட் அடித்து வருகிறது. இந்நிலையில் ரசிகர்கள், தமன்னாவின் நடனத்தை வேறு பல பாடலுடன் சிங்க் செய்தும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இப்பாடலுக்கு நடனமாடியும் சமூக வலைதளங்களில் வைரல் செய்து வருகின்றனர்.

நடிகை தமன்னா, இதுபோன்ற ரசிகர்களின் வீடியோக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து பாராட்டி வருகிறார். அதில், நவீன் என்ற நபர், பிரபல நடனக் கலைஞர் ஷகிராவின் ‘This time for Africa’ எனும் பாடலை சிங்க் செய்து ‘இந்தியாவின் ஷகிரா’ என்று தமன்னாவைப் பாராட்டி வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதை தமன்னாவே பாராட்டி, ‘நன்றாக சிங்க் ஆகிறது’ என்று பதிவிட்டுள்ளார்.

தமன்னா, | ‘காவாலா’ பாடல்

அதேபோல, க்யூட்டான குழந்தை தமன்னாவைப் போல ‘காவாலா’ பாடலுக்கும் நடனமாடும் வீடியோவை ரீ-ட்வீட் செய்த தமன்னா, “பாடுவதையும், நடனமாடுவதையும் நான் அதிகமாக விரும்புவதற்குக் காரணம் இதுதான். குழந்தைகளும் இப்பாடலை விரும்பி அதற்கு நடனமாடுவது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது” என்று பதிவிட்டுள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.