KH 233: கமலின் KH 233 பயோபிக் படம் கிடையாது… திடீர் திடீர்ன்னு ட்விஸ்ட் வைக்கும் H வினோத்!

சென்னை: உலகநாயகன் கமல்ஹாசனின் 233வது படத்தை H வினோத் இயக்கவுள்ளார்.

ராஜ்கமல் பிலிம்ஸின் 52வது படமாக உருவாகும் இப்படத்தின் அபிஸியல் அப்டேட் கடந்த வாரம் வெளியானது.

இந்தப் படம் உண்மைச் சம்பவத்தை பின்னணியாக வைத்தோ அல்லது பயோபிக் படமாகவோ இருக்கலாம் என சொல்லப்பட்டது.

ஆனால், தற்போது இதுகுறித்து பேசியுள்ள இயக்குநர் ஹெச் வினோத் KH 233 நிச்சயமாக பயோபிக் படம் இல்லை எனக் கூறி டிவிஸ்ட் வைத்துள்ளார்.

KH 233 பயோபிக் படம் கிடையாது: உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2, ப்ராஜெக்ட் கே திரைப்படங்கள் விரைவில் வெளியாகவுள்ளன. அதனைத் தொடர்ந்து ஹெச் வினோத் இயக்கத்தில் KH 233, மணிரத்னம் இயக்கும் KH 234 படங்களில் ஒரேநேரத்தில் நடிக்கவுள்ளார் கமல். இந்த இரண்டு படங்களின் அபிஸியல் அப்டேட்டும் ஏற்கனவே வெளியாகிவிட்டன.

KH 233 படத்தை ஹெச் வினோத் இயக்குவது மட்டுமே உறுதியாகியுள்ளது. இந்தப் படத்தில் கமலுடன் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் குறித்து இதுவரை அறிவிப்புகள் வெளியாகவில்லை. அதேநேரம் விஜய் சேதுபதி லீட் ரோலில் நடிக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனாலும் இதுகுறித்து KH 233 படக்குழு தரப்பில் இருந்து எந்தவிதமான அப்டேட்டும் வெளியாகவில்லை.

கமல்ஹாசனின் கையில் தீப்பந்தம் Rise To Rule என்ற கேப்ஷனுடன் மிரட்டலாக வெளியான KH 233 படத்தின் ப்ரோமோ வீடியோ. இதனால் இந்தப் படம் அரசியல் பின்னணியில் இருக்கலாம் என சொல்லப்பட்டது. அதேபோல், விவசாயத்தை பின்னணியாக வைத்து உருவாகவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் அல்லது நெல் ஜெயராமன் ஆகியோரில் ஒருவரின் பயோ பிக் படமாக இருக்கும் எனக் கூறப்பட்டது.

ஆனால், இந்த தகவல்கள் உண்மையில்லை என இயக்குநர் ஹெச் வினோத் மறுத்துள்ளார். KH 233 விவசாயம் படம் இல்லை, கமல் சாரிடம் இரண்டு, மூன்று கதைகள் குறித்து பேசினோம். பின்னர் அவர் சொன்ன கதைகள் எங்களுக்கும் ரொம்பவே இன்ட்ரஸ்டிங்காக இருந்தது. அதனால் அந்த ஒன்லைனை திரைக்கதையாக மாற்றி படமாக்குகிறோம். தமிழில் நிறைய உண்மை கதைகள் படமாக்கப்பட்டன, ஆனால் நான் இனி உண்மையாகப் போற கதைகளை இயக்கப் போகிறேன் எனக் கூறியுள்ளார் ஹெச் வினோத்.

அவரின் இந்த அப்டேட்டால் கோலிவுட்டே பரபரப்பாக காணப்படுகிறது. நிச்சயமாக KH 233 படம் தரமான சம்பவமாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை என ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் KH 233 படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாம். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்போது ஏஆர் ரஹ்மான் அல்லது அனிருத் இருவரில் ஒருவர் கமிட்டாகலாம் எனக் கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.