TV host suspended in pornographic case | ஆபாச பட விவகாரத்தில் டிவி தொகுப்பாளர் சஸ்பெண்ட்

லண்டன்: ஆபாச பட விவகாரத்தில், பி.பி.சி., நிறுவன பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய நாடான பிரிட்டனில், பரஸ்பர சம்மதத்துடன் பாலியல் உறவு வைத்துக் கொள்வதற்கான வயது, 16 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், 18 வயதுக்குட்பட்டவர்களை ஆபாசப் படம் எடுப்பது குற்றம்.

தலைநகர் லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும், பி.பி.சி., ஊடக நிறுவனத்தின் நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஒருவர் மீது இது தொடர்பாக புகார் கூறப்பட்டுள்ளது.

அவர் மீது, 17 வயதுக்குட்பட்ட ஒருவருக்கு பணம் கொடுத்து, ஆபாச படங்கள் பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இது குறித்து, 17 வயதுக்குட்பட்டவரின் தாய் புகார் அளித்துள்ளார்.

அந்தப் பணத்தில், அந்த நபர், போதைப் பொருள் வாங்கி, தற்போது அதற்கு அடிமையாகியுள்ளதாக புகாரில் கூறப்பட்டுள்ளது.

அந்த தொகுப்பாளரின் பெயர் வெளியிடப்படவில்லை. அதுபோல, 17 வயதுக்குட்பட்டவர், ஆணா, பெண்ணா என்பதும், பெயரும் வெளியிடப்படவில்லை.

இந்த விவகாரம் தொடர்பாக, சமீபத்தில் மற்றொரு பத்திரிகையில் செய்தி வெளியானது. இதையடுத்து நடவடிக்கை எடுக்கும்படி, பல்வேறு கட்சிகள் வலியுறுத்தின. இந்நிலையில், அந்த தொகுப்பாளர், ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டுள்ளதாக, பி.பி.சி., அறிவித்துள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.