Vadivelu: 3 ஆஸ்கர் வென்ற படத்தை ரீமேக் செய்யும் மாமன்னன் வடிவேலு, மாரி செல்வராஜ், உதய்ணா?

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான மாமன்னன் படம் ரிலீஸான 9 நாட்களில் ரூ. 52 கோடி வசூல் செய்திருப்பதாக
உதயநிதி ஸ்டாலின்
தெரிவித்தார்.

திமுகவில் சாதிய பாகுபாடா?ரஞ்சித் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் உதயநிதி பதில்!!
அந்த படத்தில் மாமன்னனாகவே வாழ்ந்திருந்த வடிவேலுவின் நடிப்பை அனைவரும் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். மாமன்னனுக்காக வடிவேலுவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கொடுக்கப்பட் வேண்டும் என திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்நிலையில் மாமன்னன் வெற்றிக்கூட்டணி மீண்டும் சேரவிருக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது.

ராபர்டோ பெனிக்னி(Roberto Benigni) எழுதி, இயக்கி, நடித்த Life is Beautiful இத்தாலிய காமெடி-டிராமா படம் கடந்த 1997ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. அந்த படத்திற்கு சிறந்த நடிகர் உள்பட மூன்று பிரிவுகளில் ஆஸ்கர் விருது கிடைத்தது.

மூன்று ஆஸ்கர் விருதுகளை தட்டித் தூக்கிய லைஃப் இஸ் பியூட்டிஃபுல் படத்தை தமிழில் ரீமேக் செய்ய வேண்டும் என்கிற தன் ஆசையை மாரி செல்வராஜிடம் தெரிவித்தாராம் வடிவேலு. அதற்கு மாரி செல்வராஜும் சம்மதம் தெரிவித்துவிட்டாராம்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு மீண்டும் நடிக்கவிருக்கும் படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறதாம். இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை காத்திருக்க வேண்டியது தான்.

தமிழில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கும் மாமன்னன் படத்தை தெலுங்கில் டப் செய்திருக்கிறார்கள். நாயகுடு என்று பெயர் வைத்திருக்கிறார்கள். அந்த படத்தின் ட்ரெய்லரை தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு ட்விட்டரில் வெளியிட்டார்.

நாயகுடு படம் ஜூலை 14ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது. மாமன்னனை போன்றே நாயகுடுவும் வசூல் வேட்டை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக மாமன்னன் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசை என்றதும், அவர் எப்படி இதற்கு சரிபட்டு வருவார் என்றார்கள் ரசிகர்கள். படம் பார்த்த பிறகு காலத்திற்கேற்ப மாறிக் கொள்ளும் மனிதர் ரஹ்மான் என்பது புரிகிறது என தெரிவித்தனர்.

இதற்கிடையே மாமன்னன் படத்தின் சக்சஸ் மீட் சென்னையில் நடந்தது. அதில் பேசிய வடிவேலு கூறியதாவது,

அண்ணன் நீங்கள் நடக்கும்போது கூட காமெடியாக இருந்துவிடக் கூடாது. பார்த்து என்றார் உதயநிதி ஸ்டாலின். அவர் சொன்னதை கேட்டு எனக்கு ஜர்க்காகிவிட்டது. உதயநிதி இப்படி சொல்லிட்டாரே என கீர்த்தி சுரேஷிடம் கூறினேன். அவரோ, உங்களால் முடியும் சார் என்றார்.

Maamannan: என்னம்மா இப்படி சொல்றாரு: உதயநிதி ஸ்டாலின் பற்றி கீர்த்தியிடம் புகார் தெரிவித்த வடிவேலு

இந்த படத்தின் உண்மையான மாமன்னன் மாரி செல்வராஜ் தான். இந்த கதையை ஏற்றுக் கொண்ட உதயநிதி ஸ்டாலின் மன்னாதி மன்னன் என்று கூறினார்.

மாமன்னன் படத்துடன் நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். அந்த முடிவில் மாற்றம் இல்லை என்று கூறியிருக்கிறார்.

உடனே முடிவை மாற்றிக்கொள்ளச் சொல்லவில்லை. ஒரு குட்டி பிரேக் எடுத்துக் கொண்டு மீண்டும் நடிக்க வர வேண்டும் அண்ணா என உதயநிதி ஸ்டாலினிடம் ரசிகர்கள் அன்பு கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் அவரோ மக்கள் பணி தான் எனக்கு முக்கியம் என கூறி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.