அடுத்த 2 நாட்களுக்கு ரெட், ஆரஞ்ச் அலர்ட்ஸ்… வெள்ள அபாயம்… வானிலை மையம் வார்னிங்!

13 ஆம் தேதி வரை வட இந்தியாவின் சில மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் மற்றும் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று ரெட் அலர்ட்இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. செவ்வாய்கிழமையான இன்று பல மாநிலங்களுக்கு சிவப்பு மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கையை விடுக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்திற்கு இன்று சிவப்பு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என அம்மாநில அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.

​ இன்னைக்கும் நாளைக்கும் நல்ல சான்ஸ் இருக்கு… சென்னை ரெய்ன்ஸின் மழை அப்டேட்!​நாளையும் ரெட் அலர்ட்இதேபோல் அருணாச்சல பிரதேசம், அசாம், மேகாலயா, சிக்கிம் மற்றும் இமயமலை மேற்கு பகுதிகளிலும் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் எனவும் நாளையும் இதே நிலைதான் நீடிக்கும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதேபோல் இமாச்சலப் பிரதேசத்திற்கு இன்று சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு அதி கன மழை பெய்துவரும் நிலையில் நாளை இமாச்சலப் பிரதேசத்திற்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.​ பெருவை மிரட்டும் அரிய நோய்… அவசர நிலையை பிரகடனப்படுத்தியது அரசு!​
ஆரஞ்ச் அலர்ட்மேலும் வடமேற்கு உ.பி.யில் கனமழை பெய்யும் என்றும் டெல்லியில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஜூலை 12 ஆம் தேதியான நாளை உத்தரகாண்ட் மற்றும் மேற்கு உத்தரபிரதேசத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும்.
​ 2026க்கு குறி வைக்கிறாரா விஜய்? பனையூர் வீட்டில் நிர்வாகிகளுடன் நடக்கும் முக்கிய மீட்டிங்!​13 ஆம் தேதி வரைபீகாரில் வரும்13 ஆம் தேதி வரை கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என்றும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜூலை 11-12 தேதிகளில் அருணாச்சலப் பிரதேசம், அஸ்ஸாம் மற்றும் மேகாலயா மற்றும் மேற்கு வங்காளம் மற்றும் சிக்கிம் ஆகிய இடங்களிலும் ஒருசில இடங்களில் மிகக் கடுமையான மழை பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.
​ உதயசூரியனுக்கு ஓட்டுப்போட்டா கருணாநிதி குடும்பத்திற்குதான் விடியும்… தமிழகத்திற்கு விடியாது.. சீமான் ஆவேசம்!​பள்ளிகளுக்கு விடுமுறைடெல்லியில் 41 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்துள்ளது. இதனால் பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நகரின் பல பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இமாச்சலப் பிரதேசம் கனமழை, வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவால் உருக்குலைந்து போயுள்ளது. ரயில் மற்றும் போக்குவரத்து சேவை முடங்கியுள்ளது.
​ கொட்டித்தீர்க்கும் கனமழை… ஆர்ப்பரிக்கும் வெள்ளம்.. அதிகரிக்கும் பலி… இன்றும் ரெட் அலர்ட்!​அபாய அளவை தாண்டியதுகொட்டித்தீர்க்கும் கனமழையால் யமுனா நதியில் தண்ணீர் அபாய அளவை தாண்டியுள்ளது. தொடர் கனமழை வட மாநிலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது பெய்து வரும் மழையே பெருத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அடுத்த இரண்டு நாட்களுக்கு ரெட் மற்றும் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பது மக்களை பீதியடைய செய்துள்ளது.
​ கறுப்பு நிற புடவையில் ஷிவானி ஷேர் செய்த போட்டோஸ்… ஃபயரை பறக்கவிடும் நெட்டிசன்ஸ்!​

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.