ஆன்லைன் ஆர்டர்: டிரெண்டிங்கில் உள்ள டாப் 5 உணவுகள்… முதலிடம் பிடித்த சிக்கன் பிரியாணி!

`இந்த பொழப்பு தான் நல்லா ருசிச்சு சாப்பிட கிடைச்சது’ என கொண்டாட்டங்களின் போதும், சற்று களைப்பாக இருந்தாலும் `போனை எடு, ஆன்லைனில் ஆர்டரை போடு’ என மக்கள் ஆன்லைனில் உணவு வாங்குவதை வழக்கமாக்கி வருகின்றனர். அதிலும் குறிப்பாக மக்களிடையே உணவு டெலிவரியில் அதிகம் கவனம் பெற்ற நிறுவனம் ஸொமேட்டோ (Zomato).

தற்போது ஸொமேட்டோவில் 2022 ஜூலை 22 முதல் 2023 மே வரை அதிகம் வாங்கப்பட்ட உணவுகள் குறித்த விவரங்கள் மற்றும் தரவுகள் வெளியாகி உள்ளது. பகுப்பாய்வு தளமான `jefferies’ இந்த ஆய்வு குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. 

சிக்கன் பிரியாணி |Zomato

*இந்தியா முழுவதும் சிக்கன் பிரியாணி, சாட், சாண்ட்விச், சிக்கன் ஸ்டார்டர் மற்றும் தோசை போன்ற ஐந்து உணவுகள் டாப் டிரெண்டிங்கில் உள்ளது.

*டெல்லி, தலைநகரைச் சுற்றியுள்ள பகுதிகள், பெங்களூரு, மும்பை, ஹைதராபாத், சென்னை, புனே, கொல்கத்தா மற்றும் அகமதாபாத்தில் ஆர்டர் செய்யப்பட்ட மெனுக்களில் சிக்கன் பிரியாணி முதலிடத்தில் உள்ளது.

*இந்த நகரங்களிலேயே 55 சதவிகித உணவு ஆர்டர்கள் புக் செய்யப்பட்டுள்ளது.

*ஸொமேட்டோவில் ஆர்டர் செய்யப்பட்ட முதல் 7 உணவுகள் மற்றும் அதன் சராசரி விலை…

வட இந்திய உணவுகள் 169 ரூபாய்க்கும், பிரியாணி 248 ரூபாய்க்கும், ஏசியன் 201 ரூபாய்க்கும், பிட்ஸா  220 ரூபாய்க்கும், தென் இந்திய உணவுகள் 109 ரூபாய்க்கும், டெஸர்ட் 158 ரூபாய்க்கும், பர்கர் 179 ரூபாய்க்கும் மற்றும் ரோல்ஸ் 161 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

*பெரும்பாலான உணவுகளின் விலை 250 ரூபாய்க்கும் கீழ் உள்ளது.

உணவுகள்

*ஸொமேட்டோவில் தனி நபர் ஆர்டர் செய்யும் அளவு (Per-Capita order volume) பெங்களூருவில் 100-ஆகவும், ஹைதராபாத்தில் 82 – ஆகவும், டெல்லி மற்றும் தலைநகர் சுற்றியுள்ள பகுதிகளில் 78- ஆகவும், புனேவில் 71- ஆகவும், சென்னையில் 56-ஆகவும், மும்பையில் 52-ஆகவும், கொல்கத்தாவில் 26-ஆகவும், அகமதாபாத்தில் 25-ஆகவும் உள்ளது.

வரும் காலங்களில் ஆன்லைன் உணவு தளங்களின் வளர்ச்சி அபரிவிதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.