ஜெராக்ஸ் மிஷினே குழம்புமே! AI உருவக்கிய செய்தி வாசிப்பாளர்! லிசா உருவானது எப்படி? சுவாரஸ்யம்

புவனேஸ்வரம்: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் செய்தி வாசிப்பாளர் லிசா உருவானது எப்படி தெரியுமா?

விஞ்ஞானம், தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இந்தியா நாளுக்கு நாள் அபரிமிதமான நல்லதொரு வளர்ச்சியை பெற்று வருகிறது. அதில் முக்கியமானது ஏஐ எனப்படும் ஆர்டிஃபிசியல் இன்டலிஜென்ஸ். தமிழில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் என அழைக்கப்படுகிறது.

இந்த தொழில்நுட்பம் ஆரம்பத்தில் பொழுதுபோக்காக பயன்படுத்தப்பட்டது. ஆனால் இன்று மனித வளத் துறை. மென்பொருள் உருவாக்கம், எந்திரவியல் உள்ளிட்ட துறைகளிலும் இந்த டெக்னாலஜி புகுத்தபபட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் பல்வேறு பிரச்சினைகளை தீர்க்கிறது.

இந்த தொழில்நுட்பத்தில் கேட்கும் அனைத்து வகையான கேள்விகளுக்கும் பதிலளிக்கும் வகையில் சாட்ஜிபிடி அறிமுகமானது. அமெரிக்காவில் நீதிமன்றங்களில் வழக்குகளை வாதாடுவதற்காக செயற்கை நுண்ணறிவு மூலம் உருவான ரோபோக்கள் அறிமுகமாகிவிட்டன. அது போல் அமெரிக்காவின் நியூயார்க் நகரை சேர்ந்த பெண் ஒருவர் தனக்கு பிடித்த குணாதிசயங்கள் கொண்ட ஒரு உருவத்தை செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கி அதை திருமணம் செய்து கொண்டார்.

அது போல் இன்னொரு பெண் ஆன்லைன் டேட்டிங் தளத்தை உருவாக்கி அதற்காக செயற்கை நுண்ணறிவு மூலம் ஒரு நபரை உருவாக்கி வாடிக்கையாளர்களிடம் பழக வைத்து சம்பாதித்து வருகிறார். சீனாவிலும் செய்தி வாசிப்பாளர் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டு செய்தி வாசித்து வருகிறார். அந்த வகையில் இந்தியாவிலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வந்துவிட்டது.

அதன்படி ஒடிஸாவில் பிரபல தனியார் தொலைகாட்சி நிறுவனமான ஒடிஸா டிவி நெட்வொர்க் முதல்முறையாக செயற்கை நுண்ணறிவு மூலம் செய்தி வாசிப்பாளரை அறிமுகம் செய்து வைத்துள்ளது. அதன் பெயர் லிசா. வாசிக்க வேண்டிய செய்தியை எழுதி கொடுத்தால் அப்படியே படிக்கும் திறனுடையது. கடினமான வார்த்தைகளை கூட எந்த திணறல் இல்லாமல் படித்து விடுகிறது.

முதலில் ஒடியா, ஆங்கிலத்தில் மட்டும் செய்திகளை வாசிக்கும் வகையில் உருவானது. இந்த செயற்கை நுண்ணறிவு செய்தியாளர் லிசாவை உருவாக்கியது சுவாரஸ்மானது. லிசாவின் உருவம் அதே தொலைகாட்சியில் முக்கிய பொறுப்பு வகித்து வரும் மற்றொரு பெண்ணை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அச்சு அசலாக அந்த பெண் போலவே செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட லிசாவும் உள்ளார். இந்த லிசா உருவாக்கப்பட்டது குறித்து யாருக்கும் தெரியாமல் இருந்தால் லிசாவை ஒரு பெண் என்றே கருதுவார்கள். இந்த லிசாவால் எத்தனை மணி நேரம் வேண்டுமானாலும் செய்திகளை வாசிக்க முடியும்.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.