காத்மண்டு: நேபாள நாட்டு பிரதமராக இருப்பவர் புஷ்ப கமல் தஹால் பிரசண்டா. இவரது மனைவி சீதா தஹால் (வயது 69). நீண்ட காலம் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு காத்மண்டு நகரில் உள்ள நார்விச் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்து உள்ளார். பார்கின்சன் வகையை சேர்ந்த ஒரு சிக்கலான வியாதியால் நீண்டகாலம் அவர் அவதிப்பட்டு வந்து உள்ளார். இந்நிலையில், இன்று காலை 8.33 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார். மாரடைப்பால் அவர் காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு முக்கிய பிரமுகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement