இலங்கையில் நடைபெறவுள்ள வளர்ந்துவரும் அணிகளுக்கு இடையிலான ஆசியக்கிண்ணத் தொடருக்கான 15 பேர்கொண்ட இலங்கை ஏ அணியையும் இதற்கு தலைவரையும் இலங்கை கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
வளர்ந்துவரும் அணிகளுக்கு இடையிலான ஆசியக்கிண்ணத் தொடர் இன்று (13) முதல் எதிர்வரும் 23ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.
இதற்கமைய வளர்ந்துவரும் அணிகளுக்கு இடையிலான ஆசியக்கிண்ணத் தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி, பங்களாதேஷ் அணியை இன்று (13) கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் எதிர்கொள்கிறது.
இலங்கை ஏ அணி
துனித் வெல்லாலகே (தலைவர்)
பசிந்து சூரியபண்டார
மினோத் பானுக
அவிஷ்க பெர்னாண்டோ
லசித் குரூஸ்புள்ளே
சஹான் ஆராச்சிகே
அஷேன் பண்டார
லஹிரு உதார
ஜனித் லியனகே
பினுர பெர்னாண்டோ
லஹிரு சமரகோன்
இசித விஜேசுந்தர
சாமிக்க கருணாரத்ன
பிரமோத் மதுசான்
துஷான் ஹேமந்த