Ban on Non-Essential Helicopters in Nepal: Steps to Prevent Accidents | நேபாளத்தில் அத்தியாவசியமற்ற விமானங்களுக்கு தடை: விபத்தை தடுக்க நடவடிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

காத்மாண்ட்: நேபாளத்தில் அத்தியாவசியமற்ற விமானங்களுக்கு விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் தடை விதித்துள்ளது. இது அடிக்கடி ஏற்படும் விபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

latest tamil news

சில தினங்களுக்கு முன், நேபாளத்தில் காத்மாண்டுவில் இருந்து சோலுகும்பு பகுதிக்கு சென்ற ஹெலிகாப்டர் மரத்தின் மீது மோதி விபத்தில் சிக்கி 6 பேர் பலியாகினர். கடந்த ஜனவரி மாதம் காத்மண்டுவிலிருந்து பொக்காரா விமான நிலையத்திற்கு எட்டி ஏர்லைன்ஸ் என்ற விமானம் சென்று கொண்டிருந்த போது விபத்தில் சிக்கி, 72 பேர் உயிரிழந்தனர். இது கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத மோசமான விமான விபத்து என்று விஞ்ஞானிகள் கூறினர்.

இந்நிலையில், அடிக்கடி ஏற்பட்டு வரும் விபத்துக்களை தடுக்கும் வகையில், அத்தியாவசியமற்ற விமானங்களுக்கு விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் தடை விதித்துள்ளது. இது வரும் செப்டம்பர் மாதம் வரை அமலில் இருக்கும். மேலும் விபத்துக்கான காரணம் என்ன என்பதைக் கண்டறிய விசாரணைக் குழுவை அமைத்துள்ளது.

latest tamil news

இது குறித்து அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது:

கடந்த சில தினங்களாக விபத்துக்கள் அதிகரித்து காணப்படுகின்றன. எவரெஸ்ட் சிகரங்களுக்கு அருகில் உள்ள சிறிய விமான நிலையங்கள் அடிக்கடி மேகங்களால் சூழ்ந்து காணப்படுகின்றன. இதனால் அத்தியாவசியமற்ற விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அடிக்கடி ஏற்பட்டு வரும் விபத்துக்களை தடுக்க முடியும் என்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.