மாவீரன் (தமிழ்/தெலுங்கு)

‘மண்டேலா’ படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் ‘மாவீரன்’. அதிதி ஷங்கர், மிஷ்கின், சரிதா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து இருக்கின்றனர். தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் பைலிங்குவலாக உருவாகியுள்ள இத்திரைப்படம் வரும் ஜூலை 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
Mission Impossible Dead Reckoning – Part One (ஆங்கிலம்/தமிழ், தெலுங்கு/ இந்தி)

கிறிஸ்டோபர் மெக்குவாரி இயக்கத்தில் ஸ்டண்ட்டுகளுக்குப் பெயர்போன ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் நடிப்பில் அட்வன்சர், ஆக்ஷன், திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் ‘Mission Impossible Dead Reckoning – Part One’. இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் முதல் பாகம் தற்போது ஜூலை 12ம் தேதி) ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகியுள்ளது.
முடியாத விஷயங்களை முடித்துக்காட்டி, பிரச்னைகளுக்குத் தீர்வு கண்டு உலகைப் பாதுகாப்பதுதான் ‘Mission Impossible’ படங்களின் அடிப்படையான கதைக்கரு. அவ்வகையில் இன்றைய டெக் உலகில் அசுர வேகத்தில் வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் ஒன்று, டிஜிட்டல் சாதனங்கள் அனைத்தையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து உலகை ஆட்டிப் படைக்கிறது. அதைக் கட்டுப்படுத்த இவ்வுலகில் இரண்டே சாவிகள்தான் (Key) இருக்கின்றன. ஆனால், அது எங்கிருக்கிறது, அதை எப்படிப் பயன்படுத்துவது என்று தெரியாது. அப்படியான ஒரு முடியாத விஷயத்தை முடித்துக்காட்டி, கட்டுப்பாடின்றி செயல்படும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திற்குத் தீர்வு காணுவதே இதன் கதைக்களம்.
பாபா பிளாக் ஷீப் (தமிழ்)

யூடியூப் பிரபலமான ராஜ்மோகன் ஆறுமுகம் இயக்கத்தில் Rj விக்னேஷ்காந்த், ராம் நிஷாந்த், அம்மு அபிராமி, அப்துல் அயாஸ், நரேந்திர பிரசாத் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பாபா பிளாக் ஷீப்’. பள்ளிப் பருவக்காலத்தில் நடக்கும் மகிழ்ச்சியான அனுபவங்கள், சிறுசிறு பிரச்னைகள், நட்பு, காதல், கனவு என ஒரு ஃபீல்குட் கதைக்களத்தைக் கொண்ட இத்திரைப்படம் ஜூலை 14ம் தேதி திரையரங்களில் வெளியாகவுள்ளது.
Baby (தெலுங்கு)

சாய் ராஜேஷ் நீலம் இயக்கத்தில் ஆனந்த் தேவரகொண்டா, மௌனிகா ரெட்டி, சீதா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள தெலுங்கு திரைப்படம் ‘Baby’. காதல், ரொமாண்டிக் திரைப்படமான இது ஜூலை 14ம் தேதி (வெள்ளிக்கிழமை) வெளியாகிறது.
Padmini (மலையாளம்)

‘Kunjiramayanam’, ‘The Priest’ படங்களின் எழுத்தாளர் தீபு பிரதீப் எழுத்தில் சென்னா ஹெக்டே இயக்கத்தில் குஞ்சாக்கோ போபன், மடோனா செபாஸ்டியன், வின்சி அலோஷியஸ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள மலையாளத் திரைப்படம் ‘Padmini’. காதல், காமெடி, டிராமா திரைப்படமான இது ஜூலை 14ம் தேதி (வெள்ளிக்கிழமை) வெளியாகிறது.
கவிஞராகவும், முழு நேர கல்லூரி ஆசிரியராகவும் இருக்கும் கதைநாயகன் ரமேஷன், தன் வாழ்வில் சந்திக்கும் பிரச்னைகள், காதல் அனுபவங்கள் என இலகுவான கதைக்களத்தைக் கொண்டது இத்திரைப்படம்.
இந்த வார ஓடிடி ரிலீஸ்கள்
Bird Box Barcelona (Spanish) – Netflix

டேவிட் பாஸ்டர், அலெக்ஸ் பாஸ்டர் இயக்கத்தில் மரியோ காசாஸ், ஜார்ஜினா காம்ப்பெல், டியாகோ கால்வா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் சயின்ஸ் ஃபிக்சன், அப்போகலிப்டிக் ஹாரர் திரில்லர் திரைப்படம் ‘Bird Box Barcelona’. இப்படம் ஜூலை 14ம் தேதி ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
அமானுஷ்ய சக்திகள் கொண்டக் கூட்டம் உலகையே ஆட்டிப்படைத்து தனது கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்து அழிக்க நினைக்கிறது. அந்த தீய சக்திகளை அழிக்க கதாநாயகனும் அவரது நண்பர்களும் போராடுவதுதான் இதன் கதைக்களம்.
Love Tactics 2 (Turkish) Netflix

ரெகாய் கராகஸ் இயக்கத்தில் Demet Özdemir, Sükrü Özyildiz, Atakan Çelik உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Love Tactics 2’. கதாநாயகி அஸ்லிக்கு திருமணத்தில் உடன்பாடில்லை. ஆனால், கெரெம் என்பவரை காதலித்து வருகிறார். அஸ்லியின் விருப்பத்தை ஏற்று இருவரும் திருமணம் செய்துகொள்ள வேண்டாம் என்று முடிவெடுக்கின்றனர். ஒரு கட்டத்தில் அஸ்லிக்குத் திருமண ஆசை வந்துவிட அதை எப்படிக் காதலர் கெரெமிடம் சொல்லி இருவரும் திருமணம் செய்துகொள்கிறார்கள் என்பதுதான் இதன் கதைக்களம்.
இந்த வார வெப்சீரிஸ்கள்
Hostel Days (தெலுங்கு) – Amazon Prime Video – July 13

இன்ஜினியரிங் படிக்கும் ஆறு கல்லூரி மாணவர்கள் தங்கள் படிப்பு, காதல், வாழ்க்கை, நட்பு, கனவுகள் எனப் பல்வெறு விஷயங்களில் போராடுவதான் இதன் கதைக்களம். மனதிற்கு இலகுவான கல்லூரி நாள்களை நினைவுபடுத்தும் இந்த வெப்சிரீஸின் முதல் சீசன் ஜூலை 13ம் தேதி (இன்று) ‘Amazon Prime Video’ ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
Maya Bazaar For Sale (தெலுங்கு) – Zee5

கௌதமி சல்லகுல்லா இயக்கத்தில் நவ்தீப், ஈஷா ரெப்பா, ஜான்சி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள தெலுங்கு திரைப்படம் ‘Maya Bazaar For Sale’. இத்திரைப்படம் ‘Zee5’ ஓடிடி தளத்தில் ஜூலை 14ம் தேதி முதல் வெளியாகிறது.
மாய பஜார் எனும் பெயரில் புதுவீடு வாங்கி மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வரும் குடும்பத்திற்கு, ஒருகட்டத்தில் பல பிரச்னைகள் வருகின்றன. அவர்களின் மாய பஜாரும் கைப்பற்றப்படும் சூழ்நிலை உருவாகிறது. இந்தப் பிரச்னைகள அவர்கள் எப்படி எதிர்கொண்டு மீண்டும் தங்களின் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினார்கள் என்பதுதான் இதன் கதைக்களம்.
The Trial (இந்தி) – Disney+ Hotstar

சுபர்ன் வர்மா இயக்கத்தில் கஜோல், குப்ரா சைட், ஃப்ளோரா சைனி உள்ளிட்டோர் நடிப்பில் தயாராகியிருக்கும் க்ரைம் திரில்லர், கோர்ட் ட்ராமா திரைப்படம் ‘The Trial’. இத்திரைப்படம் ‘Disney+ Hotstar’ ஓடிடி தளத்தில் ஜுலை 14ம் தேதி முதல் வெளியாகிறது.
வழக்கறிஞருக்குப் படித்துவிட்டு கணவர், குழந்தைகள் என குடும்பத்தைப் பார்த்துக் கொள்பவராக இருக்கிறார் கஜோல். நன்றாகச் சென்று கொண்டிருக்கும் வாழ்க்கையில் ஒரு பெண்ணுடன் ஏற்பட்ட உறவின் சிக்கல்களால் கஜோலின் கணவர் சிறைக்குச் செல்லும் நிலை ஏற்படுகிறது. கணவரை வெறுக்கும் கஜோல், தனியாகக் குடும்பத்தைப் பார்த்துக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டு குழந்தைகளுக்காக வாழ முடிவெடுத்து வழக்கறிஞர் வேலைக்குச் செல்லுகிறார். முதல் முறையாக சில வழக்குகளைக் கையாண்டு அனுபவங்கள் பெறும் கஜோலுக்கு ஒருகட்டத்தில் கணவனின் வழக்கையே கையாளும் நிலை உண்டாகிறது. அதன்பிறகு கஜோல், தன் கணவனின் வழக்கை எடுத்து வாதாடி வழக்கிலும் வாழ்க்கையிலும் வெற்றி கண்டாரா, இல்லையா என்பதுதான் இதன் கதைக்களம்.
Ishq E Nadaan (இந்தி) – Jio Cinema

அவிஷேக் கோஷ் இயக்கத்தில் நீனா குப்தா, லாரா தத்தா, ஷ்ரியா பில்கோன்கர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்தித் திரைப்படம் ‘Ishq E Nadaan’. மூன்று தலைமுறைகளின் வேறுபட்ட காதல் அனுபவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட வெப்சீரிஸ் இது. இந்த வெப்சீரிஸ் ‘Jio Cinema’ ஓடிடி தளத்தில் ஜூலை14ம் தேதி வெளியாகிறது.
College Romance (இந்தி) – SonyLIV

கல்லூரி படிக்கும் நண்பர்களின் காதல், நட்பு உள்ளிட்டவற்றை மையமாகக் கொண்ட வெப்சீரிஸ் ‘College Romance’. 2018 முதல் வெளியாகி வந்த இந்த வெப்சீரிஸின் கடைசி சீசன் இது. அசுதோஷ் சதுர்வேதி, பங்கஜ் மவ்சி ஆகியோர் இயக்கத்தில் அபூர்வா அரோரா, கேசவ் சாதனா, ஸ்ரேயா மேத்தா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த வெப்சீரிஸ் ஜூலை 14ம் தேதி ‘SonyLIV’ ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
Kohrra (Hindi) – Netflix

குஞ்சித் சோப்ரா, சுதீப் சர்மா, டிக்கி சிசோடியா ஆக்கத்தில் விஷால் ஹண்டா, சவுரவ் குரானா, இவந்தி நோவக் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்தி வெப்சீரிஸ் ‘Kohrra’. NRI ஒருவர் அவரது திருமண நாளுக்கும் முன்னர், மர்மமான முறையில் இறந்து விடுகிறார். அவரது மரணத்தின் பின்னணி என்ன, அதற்குப் பின்னால் இருக்கும் அரசியல் என்ன என்பதே இதன் கதைக்களம். இந்த வெப்சீரிஸ் ‘Netflix’ ஓடிடி தளத்தில் ஜூலை 15ம் தேதி வெளியாகவுள்ளது.
The Summer I Turned Pretty S2 (English) – Amazon Prime Video

ஜென்னி ஹான் இயக்கத்தில் லோலா டங், கிறிஸ்டோபர் ப்ரினி, கவின் கசலேக்னோ, சீன் காஃப்மேன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ஆங்கில வெப்சீரிஸ் ‘The Summer I Turned Pretty’. ரொமாண்டிக்கான ஒரு முக்கோணக் காதல் கதையைக் கொண்ட இந்த வெப்சீரிஸின் இரண்டாவது சீசன் ஜூலை 14ம் தேதி ‘Amazon Prime Video’ ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
இருவரைக் காதலிக்கும் பெண், தனக்கான சரியான காதலை தேர்வு செய்வதில் பெரும் குழப்பத்துடன் இருக்கிறார். இறுதியில் அந்த இருவரில் யாரைத் தனக்கான சரியான துணை என்று தேர்ந்தெடுக்கிறார், அதற்கான காரணம் என்ன என்பதே இதன் கதைக்களம்.
தியெட்டர் டு ஓடிடி
தண்டட்டி (தமிழ்) – Amazon Prime Video

ராம் சங்கையா இயக்கத்தில் பசுபதி, ரோகினி, அம்மு அபிராமி, விவேக் பிரசன்னா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள காமெடி திரைப்படம் ‘தண்டட்டி’. திரையரங்குகளில் வெளியாகியிருந்த இத்திரைப்படம் இந்த வாரம் ‘Amazon Prime Video’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
காணாமல் போன மூதாட்டியான தங்கப்பொண்ணைக் கண்டுபிடிக்கக் கோரிய புகாரை விசாரிக்கிறார் பணி ஓய்வுக் காலத்தை நெருங்கும் காவலரான பசுபதி. மூதாட்டியோ கண்டுபிடிக்கப்பட்டவுடன் இறந்துவிடுகிறார். அவரை அடக்கம் செய்ய பசுபதி, காவல்துறையையே வெறுக்கும் மூதாட்டியின் ஊருக்குச் செல்கிறார். அங்கு இழவு நிகழ்வில் மூதாட்டியின் தண்டட்டி காணாமல் போய்விடுகிறது. அதை பசுபதி கண்டுபிடித்தாரா, அந்தத் தண்டட்டிக்குப் பின்னால் இருக்கும் உணர்ச்சிகரமானக் கதை என்ன என்பதுதான் இதன் கதைக்களம்.
Janaki Jaane (மலையாளம்) – Disney+ Hotstar

அனீஷ் உபாசனா இயக்கத்தில் அனார்கலி மரிக்கார், ஜானி ஆண்டனி, ஷராபுதீன் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகியிருந்த இப்படம் தற்போது ‘Disney+ Hotstar’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
பதற்றமான உணர்வைத் தரும் நோயுடைய ஒரு பெண்ணைப் புரிந்து கொண்டு காதல் செய்கிறார் கதாநாயகன். இருவருக்குமிடையே நடக்கும் சண்டைகளும், காதலும்தான் இதன் கதைக்களம்.
Ntikkakkakkoru Premondarnn (மலையாளம்) – Manorama MAX

ஆதில் எம். அஷரப் இயக்கத்தில் பாவனா, ஷராபுதீன், அசோகன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Ntikkakkakkoru Premondarnn’. மலையாள மொழித் திரைப்படமான இது திரையரங்குகளில் வெளியாகியிருந்த நிலையில் தற்போது ‘Manorama MAX’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.