பெங்களூரு: உலக மக்களை ஆட்டிப் படைக்க தொடங்கியுள்ளது ஏஐ (செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்). இப்போது இந்தியாவின் இரண்டாவது செய்தி வாசிப்பாளர் ஒரு செய்தி நிறுவனத்துக்காக தனது பணியை தொடங்கி உள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒடிசாவின் செய்தி நிறுவனம் ‘லிசா’ எனும் ஏஐ செய்தி வாசிப்பாளரை அறிமுகம் செய்திருந்தது. இந்த சூழலில் கன்னட மொழியில் மாத்தாடும் (பேசும்) ‘சௌந்தர்யா’ எனும் ஏஐ செய்தி வாசிப்பாளரை கடந்த செவ்வாய்க்கிழமை அன்று அறிமுகம் செய்துள்ளது கன்னட தொலைக்காட்சியான ‘பவர் டிவி’.
“அனைவருக்கும் வணக்கம். ஏஐ தொழில்நுட்பம் தனது தடத்தை அனைத்து துறைகளிலும் பதித்து வருகிறது. செய்தி நிறுவனங்களும் இதில் அடங்கும். என்னைப் போலவே வட இந்தியாவில் ஏஐ செய்திகளை வழங்கி வருகிறது. நான் சௌந்தர்யா. இந்தியாவின் இரண்டாவது ஏஐ செய்தி வாசிப்பாளர்” என தன்னை குறித்த அறிமுகத்தை கொடுத்துள்ளது. வெறும் செய்தி வாசிப்பாளராக மட்டுமல்லாது பவர் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் சௌந்தர்யாவை இயங்க செய்யும் முயற்சி நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Meet Miss ‘Soundarya’ South India’s first #AI generated news anchor who will be bringing news for you in Power TV Kannada #artificalintelligence pic.twitter.com/EeLqD3JX9Q
— Dr Durgaprasad Hegde (@DpHegde) July 12, 2023