டிஆர் பாலு குடும்பம் கூண்டில் ஏற வேண்டும்… நெஞ்சுவலின்னு அட்மிட் ஆகமாட்டோம்… சரமாரியாக சாடிய அண்ணாமலை!

தமிழக பாஜக தலைவரான அண்ணாமலை கடந்த மார்ச் மாதம் டிஎம்கே ஃபைல்ஸ் பார்ட் 1 என்று திமுக பிரமுகர்கள் 12 பேரின் சொத்து பட்டியலை வெளியிட்டார். இதில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திமுக எம்பி கனிமொழி, டிஆர் பாலு உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. இதற்கு திமுக தரப்பில் கடும் கண்டனம் எழுந்தது.

அண்ணாமலை வெளியிட்டது பொய்யான தகவல் என்றும் இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. மேலும் அண்ணாமலைக்கு எதிராக அவதூறு வழக்குகளும் தொடரப்பட்டன. அந்த வகையில் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் திமுக எம்பியான டிஆர் பாலு கடந்த மே மாதம் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதனை முன்னிட்டு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார். அண்ணாமலை வருகையை முன்னிட்டு நீதிமன்றத்தில் பெரும் கூட்டம் திரண்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் அடுத்தக்கட்ட விசாரணையை ஆகஸ்ட் 24 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது. அன்று அண்ணாமலை மீண்டும் ஆஜராக வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இப்போது நடக்கும் யுத்தம் மூன்றாம் தலைமுறை முதல் தலைக்கும் நடக்கும் யுத்தம். இங்கிருப்பவர்கள் அனைவரும் முதல் தலைமுறை, நாட்டிற்கு நல்லது செய்ய விரும்புபவர்கள். திமுகவின் மொத்த குடும்பமும் மூன்றாம் தலைமுறை. முதல் தலைமுறை சொந்தங்கள் ஊழலுக்கு எதிரான இந்த யுத்தத்தில் இணைய வேண்டும்.

இந்த யுத்தம் இன்றோ நாளையோ முடியும் யுத்தம் அல்ல. இது மிகப்பெரிய யுத்தட். பாஜகவின் வழக்கறிஞர் அணி எவ்வளவு வலிமையாக உள்ளது என்பது இன்றுதான் தெரிகிறது.

டிஆர் பாலு அவரது குடும்பத்தை இந்த வழக்கில் சேர்க்குமாறு கோருவோம். அவர்கள் சத்தியபிரமாணத்தில் எதுவும் இல்லை என கூறியுள்ளார். எங்களிடம் இருக்கும் ரெக்கார்டில் அவர்கள் குடும்பத்தினர் எல்லாருக்கும் சொத்து உள்ளது. அனைவரும்நீதிமன்றத்திற்கு வரவேண்டும். டிஆர் பாலு குடும்பத்தினர் கூண்டில் ஏறவேண்டும்.

எங்களின் கேள்விக்கு அவர்கள் பதில் அளிக்க வேண்டும்

நாங்களும் அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க கடமை பட்டுள்ளோம். ஆகஸ்ட் 3வது வாரம் மீண்டும் ஆஜாராக கூறியிருக்கிறார்கள். மறுபடியும் ஆஜராவோம். எந்த அமைச்சரையும் போல நடு ராத்திரியில் நெஞ்சுவலி என்ற மருத்துவமனையில் அனுமதியாக மாட்டோம். இங்கேதான் இருப்போம், எல்லா கேள்விகளுக்கும் பதில் அளிப்போம். இவ்வாறு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.