நச்சுனு முத்தம் கொடுத்து பிறந்த நாள் வாழ்த்து சொன்ன ராதிகா..60வயதிலும் என்ன ஒரு ரொமான்ஸ்!

சென்னை: நடிகர் சரத்குமாரின் 69வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், ராதிகா கணவருக்கு நச்சுனு முத்தம் கொடுத்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் சூப்ரீம் ஸ்டார், சூப்பர் ஹீரோ என பல பட்டங்களை வகித்து வந்த நடிகர் சரத்குமார் தற்போது ஹீரோ என்பதை தாண்டி ஒரு கேரக்டர் நடிகராக தன்னை நிரூபித்து வருகிறார்.

அந்தவகையில் பொன்னியின் செல்வன் படத்தில் பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் கம்பீரமாக நடித்து அசத்தி உள்ளார் சரத்குமார். நந்தினியாக நடித்த ஐஸ்வர்யா ராயின் கணவராக சரத்குமார் நடித்திருந்தார்.

சரத்குமார்: வில்லன்,ஹீரோ, குணசித்திர கதாபாத்திரம் என் எந்த கேரக்டர் கொடுத்தாலும் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தும் சரத்குமார்.1986 ஆம் ஆண்டு சமாஜம்லோ மூலம் நடிகராக தனது தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இதையடுத்து, தமிழில் நடிகர் கார்த்திக்குடன் கண் சிமிட்டும் நேரம் திரைப்படத்தில் நடித்தார். அடுத்ததாக, அவர் விஜயகாந்த்துடன், புலன் விசாரணை படத்தில் வில்லனாக நடித்தார். அந்த திரைப்படம் இவரது வாழ்க்கை பயணத்தையே மாற்றியது.

ஹிட் படங்கள்: 2000 ஆம் ஆண்டு பெண்ணின் மனதைத் தொட்டு, சூர்யாவம்சம், நாட்டாமை, சிம்மராசி, மாயி, விண்ணுக்கும் மண்ணுக்கும் அடுத்தடுத்த ஹிட் படங்களில் நடித்து 90ஸ் ஹிட்ஸ்களின் பேவரைட் கதாநாயகர்களில் ஒருவராக இருந்த சரத்குமார். பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து 2கே கிட்ஸ்களும் பிடித்த நடிகராக மாறிஉள்ளார்.

நச்சுனு முத்தம்:இந்நிலையில் நடிகர் சரத்குமார் இன்று தன்னுடைய 69 ஆவது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். ராதிகா தன்னுடைய கணவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி, 60 வயதிலும் தனது காதல் கணவருக்கு நச்சுனு முத்தம் கொடுத்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

காதல் திருமணம்: நடிகர் சரத்குமாருக்கு சாயாதேவி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு வரலட்சுமி, பூஜா என்கிற இரண்டு மகள்கள் இருக்கும் நிலையில் இருவரும் கருத்துவேறுபாடுகாரணமாக பிரிந்தனர். இதையடுத்து,2001ம் ஆண்டு ராதிகாவை திருமணம் செய்து கொண்டார். ராதிகா சரத்குமார் தம்பதிக்கு ரகுல் என்ற மகன் இருக்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.