சென்னை: நடிகர் சத்யராஜ் திரைத்துறையில் நுழைந்து 45ஆண்டுகள் ஆவதையொட்டி பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் அடியாளாக அறிமுகமான சத்யராஜ், தனது ஆசாத்தியமான வில்லத்தனத்தால், மெயின் வில்லனாக உயர்ந்து, துணை நடிகராகி பின் கதாநாயகனாகச் சாதித்து நட்சத்திரமாக மின்னிவிட்டு, இப்போது குணச்சித்திர நடிகராக தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட பல மொழிகளில் கலக்கிக் கொண்டிருக்கிறார்.
சட்டம் என் கையில்: 1978ம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான சட்டம் என் கையில் படத்தில் நடிகராக அறிமுகமானார். அந்தப் படத்தில் மெயின் வில்லனான தேங்காய் சீனிவாசன் நடித்திருப்பார். அவருக்கு அடியாளாக சத்யராஜ் முதன் முதலாக திரையில் தோன்றினார். அதன் பிறகு சின்ன சின்ன துணை கதாபாத்திரங்களில் பல படங்களில் நடித்து வந்த சத்யராஜ்.
அடுத்தடுத்த படங்களில்: சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த் என முன்னணி கதாநாயகர்களின் படங்களில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து கவனத்தை ஈர்த்தார். மணிவண்ணன் சத்யராஜின் கல்லூரி நண்பர் என்பதால், அவர் இயக்கி 1984 ம் ஆண்டு வெளியான ‘ஜனவரி 1’ என்ற படத்தில் முதல் முறையாக ஒரு முக்கியமான துணைக் கதாபாத்திரத்தில் நடித்தார் சத்யராஜ்.
முரட்டு வில்லன்: அதன் பின் நூறாவது நாள், 24 மணி நேரம் போன்ற படங்களில் மொட்டை தலையுடன் வந்து மெயின் வில்லனாக கதாநாயகனுக்கு இணையான முக்கியத்துவம் கதாபாத்திரங்களில் நடித்து பெயர் எடுத்தார். க்ரைம் த்ரில்லர் வகைமையைச் சேர்ந்த இந்த இரண்டு படங்களுமே மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று சத்யராஜுக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது.

கடலோரக் கவிதைகள்: அதன் பிறகு முதன்முறையாக சாவி திரைப்படத்தில் கதாநாயகனாக சரிதாவுக்கு ஜோடியாக நடித்திருந்தா. அந்தப் படம் வெற்றி பெற்றது. ஆனால் சத்யராஜுக்கு கதாநாயகன் என்ற பெயரை பெற்றுத்தந்த படம் பாராதி ராஜா இயக்கிய கடலோரக் கவிதைகள் படம் தான். ரஜினிகாந்துடன் மிஸ்டர் பாரத், கமல்ஹாசனின் விக்ரம் ஆகிய படங்களில் மெயின் வில்லனாக நடித்திருந்தார்.
45 Years Of Sathya Rajiyam: தமிழ் சினிமாவில் அரைநூற்றாண்டு காலமா வில்லன், கதாநாயகன், குணசித்திரா கதாபாத்திரங்களில் நடித்து வரும் சத்யராஜ், தமிழ் சினிமாவில் கால் பதித்து இன்றோடு 45ஆண்டுகள் ஆகிறது. அவர் முதன் முதலில் அடியாள நடித்த சட்டம் என் கையில் திரைப்படம் வெளியாக 45 ஆண்டுகள் ஆனதை யொட்டி, சத்யராஜின் மகன் சிபி ,அப்பாவுக்கு சினிமாவில் இந்த அபாரமான பயணம் அமைய வாழ்த்துக்கள். அவருக்கும் எங்கள் குடும்பத்துக்கும் நீங்கள் அளித்த அன்புக்கும் ஆதரவுக்கும் அனைவருக்கும் நன்றி எனபதிவிட்டுள்ளார். சினிமாவில்45 ஆண்டை கொண்டாடிவரும் சத்யராஜூக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.