வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஸ்ரீஹரிக்கோட்டா: சந்திரயான் 3 விண்கலம் திட்டமிட்டபடி நிலவை நோக்கி பயணத்தை துவக்கி உள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறினார்.
நிலவை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ, சந்திரயான் 3 விண்கலத்தை இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இதற்காக. இஸ்ரோ வந்திருந்த மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். அவருக்கு, இஸ்ரோ சார்பில் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.

இதன் பிறகு ஜிதேந்திர சிங் பேசுகையில், இந்தியாவுக்கு இது பெருமைமிகு தருணமாக மாறி உள்ளது. தன்னிறைவு இந்தியா என்ற கொள்கைக்கு ஏற்றவாறு வாழும் இந்தியாவின் உள்நாட்டு திறன்களை மீண்டும் உறுதி செய்வோம். சந்திரயான் 3 விண்கலம் மூலம் வரலாறு படைக்கப்பட்டு உள்ளது. இந்தியா பெருமைப்படுகிறது. 60 ஆண்டுகளுக்கு முன்பு விக்ரம் சாராபாய் கண்ட கனவு இன்று நிறைவேறியது. இவ்வாறு அவர் பேசினார்.
சோம்நாத் கூறுகையில், எல்விஎம்3 எம்4 ராக்கெட், சந்திரயான்3 விண்கலத்தை சரியான சுற்று வட்டப்பாதையில் கொண்டு சேர்த்தது. சந்திரயான் -3 வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்ட நிலையில் இந்தியாவிற்கு வாழ்த்துகள். விண்கலம் நல்லபடியாக செயல்படுகிறது. பெங்களூருவில் உள்ள தரைக்கட்டுப்பாட்டு மையம் தொடர்ந்து கண்காணிக்கும் என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement