வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பாரிஸ்: இந்தியாவின் இயற்கையான நட்புறவு நாடு பிரான்ஸ் என பிரதமர் மோடி பேசினார்.
![]() |
அதிபர் இமானுவெல் மெக்ரான் அழைப்பின் பேரில் பிரான்ஸ் சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு தேசிய தினத்தையொட்டி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இதை தொடர்ந்து இன்று (14 ம் தேதி) அதிபர் மாளிகையான எல்சி பேலஸ் சென்றடைந்த பிரதமர் மோடியை அதிபர் இமானுவெல் மெக்ரான் வரவேற்றார். இந்த சந்திப்பின் போது இரு தரப்பு பரஸ்பரம் நட்புறவு ,ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர்.
![]() |
பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
இமானுவெல் மெக்ரான் அளித்த பேட்டி, பிரான்ஸ் தேசிய தின அணிவகுப்பில் பஞ்சாப் ரிஜிமெண்ட் வீரர்கள் பங்கேற்றதில் மகிழ்ச்சி. உலக போர்களின் போது இந்திய ராணுவத்தினர், பிரெஞ்சு ராணுவத்தினருடன் இணைந்து போரிட்டனர். இருநாடுகளும் பல்வேறு துறைகளி்ல் இணைந்து பணியாற்றுவோம். என்றார்.
தொடர்ந்து பிரதமர் மோடி பேசியதாவது, எனக்கு சிறப்பான வரவேற்பு அளித்த அதிபர் மெக்ரானுக்கு எனது நன்றி. சுதந்திரம், சமத்துவம், சகோரத்துவத்தின் மதிப்பினை இரு நாடுகளும் பகிர்ந்து கொள்கின்றன. இந்தியாவின் இயற்கையான நட்புறவு நாடு பிரான்ஸ். இந்தோ-பசிபிக் பாதுகாப்பு விவகாரத்தில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவோம். யு.பி.ஐ முறையை அமல்படுத்திட பிரான்ஸ் ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவில் சந்திராயன்-3 விண்கலம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளது. இரு நாடுகளிடையேயான நட்புறவின் தூணாக உள்ளது ராணுவ ஒத்துழைப்பு. மேக் இன் இந்தியா திட்டத்தில் பிரான்ஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. இரு நாடுகளும் இணைந்து பிற நாடுகளுக்கு உதவுவோம்.இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement