Israeli doctors achieve feat by reattaching boys head to neck after being severed in an accident | விபத்தில் துண்டான சிறுவனின் தலையை மீண்டும் கழுத்தில் பொருத்தி இஸ்ரேல் டாக்டர்கள் சாதனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

ஜெருசலேம்: இஸ்ரேலில் கார் விபத்தில் தலை சிதைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட 12 வயது சிறுவனின் தலையை மீண்டும் கழுத்தில் பொருத்தி டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.

இஸ்ரேலின் பாலஸ்தீனியர்கள் ஆதிக்கம் அதிகம் உள்ள மேற்கு கரை பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுவன் சுலைமான் ஹூசைன் இவன் கடந்த சில வாரங்களுக்கு முன் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது கார் மோதியதில் தலைப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு 50 சதவீதம் தலை துண்டாகிய நிலையில் மீட்கப்பட்டு உடனடியாக விமானம் மூலம் ஜெருசலேமில் உள்ள புகழ்பெற்ற ஹாடாசா மருத்துவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

latest tamil news

டாக்டர்கள் அவனை பரிசோதித்து 50 சதவீதம் தான் சிறுவனை காப்பாற்ற வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர்.எனினும் பல மணி நேர அறுவை சிகிச்சைக்கு பின் துண்டாகி இருந்த தலையை மீண்டும் கழுத்தில் பொருத்தினர். மருத்துவ துறையில் இது அரிதிலும் அரிதான இந்த மருத்துவ சிகிச்சை முறை என கூறப்படுகிறது.தற்போது கிகிச்சைக்கு பின் சிறுவன் குணமடைந்து டாக்டர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தனது மகனின் தலையை மீண்டும் பொருத்தி உயிருடன் மீட்டெடுத்த டாக்டர்களுக்கு சிறுவனின் தந்தை நன்றி தெரிவித்துள்ளார். கடவுளின் கருணையால் எனது மகன் எனக்கு மீண்டும் கிடைத்துவிட்டதாக கூறினார்.

இது குறித்து சிறுவனுக்கு சிகிச்சை அளித்த டாக்டர். ஓஹட் எய்னவ் கூறியதாவது: சிறுவனின் கழுத்தில் சேதமடைந்த பகுதியில் புது பிளேட்டுகள் பொருத்த வேண்டியிருந்தது. புதுமையான தொழில்நுட்பத்தினாலும், பல மணிநேரம் நடந்த ஒரு அறுவை சிகிச்சைக்கு பின் எங்களால் சிறுவனை காப்பாற்ற முடிந்தது என்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.