Vijay: விஜய் மகன் சஞ்சய்க்கு ஜோடியாகும் பிரபல நடிகையின் மகள்.?: பரபரக்கும் கோலிவுட்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் விஜய். இவரது இயக்கத்தில் தற்போது ‘லியோ’ படம் உருவாகியுள்ளது. தற்போதைய பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வரும் இவரின் மகன் சஞ்சய்யை ஹீரோவாக்க பல முன்னணி இயக்குனர்கள் முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் சினிமாவில் இயக்குனராக தடம் பதிக்க விரும்பும் சஞ்சய், அதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

நடிகர் விஜய்யை போலவே அவரது மகன் சஞ்சய்யின் ஒவ்வொரு செயல்பாடுகளும் இணையத்தில் கவனம் பெற்று வருகின்றன. தற்போது குறும்படம் இயக்கி வரும் இவர், விரைவில் தமிழ் சினிமாவில் இயக்குனராக என்ட்ரி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. சஞ்சய்யை ஹீரோவாக வைத்து படம் இயக்கவும் சில முன்னணி இயக்குனர்கள் முயற்சி செய்ததாகவும் கூறப்பட்டது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

சூரரைப்போற்று இயக்குனர் சுதா கொங்கரா, பிரேமம் பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இதற்காக விஜய்யை அணுகியதாகவும், அவர் சஞ்சயிடமே கேட்டு கொள்ளுங்கள். அவனுக்கே ஓகே என்றால் பண்ணுங்கள் என கூறி விட்டதாகவும் தகவல்கள் வெளியானது. ஆனால் சஞ்சய் இயக்குனராக வேண்டும் என்ற தன்னுடைய முடிவில் உறுதியாக இருப்பதால், சினிமாவில் நடிக்கும் வாய்ப்பை நிராகரித்து விட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில் சஞ்சய்க்கு ஜோடியாக தனது மகளை நடிக்க வைக்க ஆசைப்படுவதாக பிரபல நடிகை தேவயானியின் கணவரும் இயக்குனருமான ராஜகுமாரன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தேவயானி, ராஜகுமாரன் தம்பதிகளுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்களின் இனியா என்பவர் 12 ஆம் வகுப்பை முடித்துவிட்டு கல்லூரியில் சேர்ந்துள்ளார்.

Sadha: 39 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாதது ஏன்.?: நடிகை சதா கூறிய பகீர் காரணம்.!

இந்நிலையில் ராஜகுமாரன், ‘நீ வருவாய் என’ படத்தின் இரண்டாம் பாகத்திற்கான திரைக்கதையை தயார் செய்திருப்பதாகவும், இந்த படத்தின் மூலம் தனது மகள் இனியாவை சினிமாவில் அறிமுகம் செய்யும் முடிவில் அவர் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தப்படத்தில் சஞ்சய்யை ஹீரோவாக நடிக்க வைக்க ராஜகுமாரன் விரும்புவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 1999 ஆம் ஆண்டு அஜித், பார்த்திபன் மற்றும் தேவயானி நடிப்பில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்ற படம் ‘நீ வருவாய் என’. இந்தப்படத்தில் ஆரம்பத்தில் அஜித் மற்றும் விஜய் நடிப்பதாக இருந்ததாம். ஆனால் ஒரு சில காரணங்களால் விஜய் அந்தப்படத்திலிருந்து விலகியுள்ளார். அதன்பின்னர் அஜித், பார்த்திபன், தேவயானி நடிப்பில் வெளியாகி இந்தப்படம் பிளாக் பஸ்டர் ஹிட்டடித்துள்ளது,

ஆண்டவருக்காக உண்மையில் சண்டைக்கு போன லோகேஷ்: என்னலாம் பண்ணிருக்காரு பாருங்க.!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.