எடப்பாடி பழனிசாமி தான் மன்னிப்பு கேட்கணும்: சூடான அமமுக டிடிவி தினகரன்

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர்கள் கட்சியில் மீண்டும் இணையவேண்டுமென்றால் மன்னிப்புக் கடிதம் கொடுத்து விளக்கம் அளித்து இணைந்து கொள்ளலாம் என்று

அறிவித்தார்.

இதனால் ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோருக்கு கிரீன் சிக்னல் கொடுத்துவிட்டாரோ என்ற பேச்சுக்கள் எழுந்தன. அதைத் தொடர்ந்து அவர்கள் மூவரை தவிர மற்றவர்கள் இணையலாம் என்று அதிமுக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இது குறித்து பேசும் போது எடப்பாடி பழனிசாமி தான் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுக்கும் நிலையில் உள்ளார் என்று கூறியுள்ளார்.

தமிழ்நாடு முன்னாள் முதல்வர் காமராஜரின் 121ஆவது பிறந்தநாள் விழா இன்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், சென்னை அண்ணாசாலையில் உள்ள காமராஜர் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

“ஓபிஎஸ் மன்னிப்பு கடிதம் கொடுக்கணும்” ராஜன் செல்லப்பா பேட்டி

அதன் பின், செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரன், “எனக்கும், சசிகலாவுக்கும், ஓபிஎஸ்ஸுக்கும் துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி. துரோகம் செய்த எடப்பாடி பழனிசாமிதான் மன்னிப்புக் கடிதம் கொடுக்க வேண்டும். மன்னிப்புக் கடிதம் கொடுக்கும் இடத்தில் எடப்பாடி பழனிசாமியும், அவரது ஆதரவாளர்களும் தான் உள்ளனர்.

கூட்டணி இல்லை என்றாலும் தனித்துப் போட்டியிடுவோம்; கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க நடைபெறும் போராட்டங்களுக்கு எங்களின் ஆதரவும் உண்டு. DMK Files 2-ஐ அதிக ஆர்வமுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என்று தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.