16 தொழிற்சங்க சம்மேளனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி, நூற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சங்கப் பிரதிநிதிகள் பிரதமர் தினேஷ் குணவர்தனவுடன் (13) அலரி மாளிகையில் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
ஊழியர் சேமலாப நிதி, தற்போதைய நிறுவன நிலைமைகள் மற்றும் தொழிற்சங்க பிரச்சினைகள் குறித்து இதன் போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி, பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொகுகே, பிரதமரின் தொழிற்சங்க ஒருங்கிணைப்புச் செயலாளர், சட்டத்தரணி துஷார திஸாநாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.