பெங்களூரு : சட்ட மேலவையில் பா.ஜ., உறுப்பினர் ஹேமலதா நாயக் கேள்விக்கு, கர்நாடக பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் பதில் அளித்து கூறியதாவது:
கிரஹ லட்சுமி திட்டத்தின் கீழ், ஆகஸ்ட் மாதம் முதல் பெண்களுக்கு மாதம் 2,000 ரூபாய் வழங்கப்படும். இது உறுதி. இந்த திட்டத்திற்கு 30 ஆயிரம் கோடி தேவை என்று மதிப்பிடப்பட்டுள்ளது. திட்டத்தை அமல்படுத்த 2023 – 2024 பட்ஜெட்டில், முதல்வர் சித்தராமையா 17,500 கோடி நிதி ஒதுக்கியுள்ளார்.
சர்வர் பிரச்னை ஒரு விஷயமே இல்லை. இன்னும் 2 அல்லது 3 நாட்களில் கிரஹ லட்சுமி திட்டத்திற்கான, விண்ணப்பம் சமர்ப்பிக்கும் தேதி குறித்து அறிவிப்பு வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement