25 மாணவர்களுக்கு விஷம்… பெண் ஆசிரியைக்கு மரண தண்டனை நிறைவேற்றம்… சீனாவில் பரபரப்பு!

சீனாவில் உள்ள ஜியாஸுவாவில் உள்ள மெங்மெங் ப்ரீ ஸ்கூல் எஜுகேஷன் என்ற கிண்டர்கார்டன் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் வாங் யுன் (39). இவருக்கும், சக ஆசிரியர் ஒருவருக்கும் கடும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக ஒரு திட்டத்தை தீட்டியுள்ளார்.

இந்தியாவிற்கு வர போகும் Tesla தொழிற்சாலை..!

கிண்டர்கார்டன் மாணவர்களுக்கு விஷம்

அதாவது, கிண்டர்கார்டன் பள்ளி மாணவர்கள் வழக்கமாக சாப்பிடும் உணவில் விஷம் கலந்துள்ளார். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமெனில் சோடியம் நைட்ரேட் என்ற ரசாயனத்தை தூவியிருக்கிறார். இதில் 25 மாணவர்கள் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 24 மாணவர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதாக கூறப்படுகிறது.

பிரான்ஸ் நாட்டில் திருவள்ளுவர் சிலை… எப்போது வரப் போகிறது தெரியுமா? பிரதமர் மோடி அறிவிப்பு!

ஒரு சிறுவன் பலியான சோகம்

ஆனால் ஒரே ஒரு மாணவன் மட்டும் 10 மாதங்கள் தொடர்ந்து மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற்பட்டது. கடைசியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இது சீனாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. பெண் ஆசிரியை விஷம் கொடுத்து கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் நடந்தது 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம்.

கணவரும் கொலை

உடனே பெண் ஆசிரியர் வாங் யுன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இதுதொடர்பான விசாரணை ஜியாஸுவாவில் உள்ள நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதற்கிடையில் வாங் யுன் தனது கணவரையும் காபியில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்திருப்பது தெரியவந்தது.

மரண தண்டனைக்கு நாள் குறிப்பு

இதனால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. தொடர் விசாரணையை அடுத்து வாங் யுன்னிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதுதொடர்பாக வாங் யுன் தரப்பில் மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை. இந்த சூழலில் மரண தண்டனையை நிறைவேற்ற உரிய நாள், நேரம் ஆகியவற்றை அந்நாட்டு அரசு முடிவு செய்தது.

சிகாகோ நகரை சுழன்றடித்த சூறாவளி… வானில் வந்த பெரிய சிக்கல்… பலமாக ஒலித்த சைரன்!

சீன அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதன்படி நேற்று முன்தினம் வாங் யுன்னிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு விட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. சீனாவை பொறுத்தவரை மரண தண்டனை நிறைவேற்றம் என்பது துப்பாக்கியால் சுட்டு அல்லது விஷ ஊசி போட்டு நிறைவேற்றப்பட்டு வந்தது.

விஷ ஊசி போட்டு தண்டனை

இதில் தற்போது விஷ ஊசி போடும் நடைமுறை தான் தொடர்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே வாங் யுன்னிற்கு விஷ ஊசி போட்டு மரண தண்டனை நிறைவேற்றப் பட்டிருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.