Kamal: உங்களை கேட்காம செய்ய மாட்டேன்: நலம் விசாரித்த கமலிடம் ரோபோ சங்கர் கோரிக்கை.!

சின்னத்திரையில் பிரபலமான ரோபோ சங்கர் ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பினை பெற்றவர். இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். சின்னத்திரையில் கிடைத்த வரவேற்பினை தொடர்ந்து தற்போது சினிமாவிலும் நடித்து வருகிறார்.

ரோபோ சங்கர் என்றாலே ஆள் வெயிட்டாக இருப்பார் என்று தான் ரசிகர்கள் அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அவர் உடல் எடை முழுவதுமாக குறைந்து ஒல்லியாக இருக்கும் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகின. அவருக்கு என்னாச்சு? உடலில் எதுவும் பிரச்சனையா? என ரசிகர்கள் தொடர்ச்சியாக கேட்டு வந்தனர்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

ஆரம்பத்தில் படத்தில் நடிப்பதற்காகவே அவர் உடல் எடையை குறைத்ததாக ரோபோ சங்கர் குடும்பத்தினர் தெரிவித்தனர். இதனையடுத்து கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பாக மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு, சாவின் விளிம்பிற்கே சென்றதாக தெரிவித்தார். இதற்கு காரணம் தன்னிடம் இருந்த சில கெட்ட பழக்க வழக்கங்கள் தான் என அவரே பேட்டியில் தெரிவித்திருந்தார்.

தற்போது உடல்நிலை சரியாகி மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். இந்நிலையில் ரோபோ சங்கரை தொலைப்பேசி வாயிலாக தொடர்பு கொண்டு அவரிடம் நலம் விசாரித்துள்ளார் நடிகர்
கமல்
. இது தொடர்பான வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், உடல் நிலையை சரியாக பார்த்து கொள்ளுங்கள் என்கிறார் கமல்.

Jailer Second Single: இங்க நான் தான் கிங்.. அடித்து சொல்லும் தலைவர்: மிரண்ட ரசிகர்கள்.!

உடனே ரோபோ சங்கர் எல்லாத்தையும் என்னுடைய மனைவி தான் கவனித்து கொள்கிறார். என் மகளுக்கு இன்னும் ஆறு மாதங்களில் திருமணம் நடைபெற உள்ளது. உங்களின் ஆசீர்வாதம் மற்றும் பாதங்கள் பட்டு நடைபெற வேண்டும். அது நடந்தால் என் பிறவி பலனை அடைந்திருவேன். உங்களை கேட்காமல் திருமண தேதியை முடிவு செய்ய மாட்டேன் என தெரிவித்துள்ளார்.

அதனை தொடர்ந்து அவரது மனைவி, மகளிடமும் பேசும் நடிகர் கமல், ரோபோ சங்கரை பார்த்துக்கொள்ளும் படி அறிவுரை வழங்குகிறார். இது தொடர்பான வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Maaveeran: மாவீரனில் மகள் அதிதியின் நடிப்பு: இயக்குனர் ஷங்கர் என்ன சொல்லிருக்காரு பாருங்க.!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.