பெங்களூரு : துணை முதல்வர் சிவகுமார் மீது, பதிவான வழக்கை, உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
கர்நாடகாவில், 2021ல் கொரோனா தொற்று தீவிரமாக இருந்ததால், இரவு ஊடரங்கு, வார இறுதி ஊரடங்கு என, பல விதிமுறைகளை, மாநில அரசு அமல்படுத்தியிருந்தது.
திருவிழா, போராட்டம் உட்பட மக்கள் அதிகமாக சேரும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும், தடை விதிக்கப்பட்டிருந்தது.
இதை புறக்கணித்து, மேகதாது திட்டத்தை வலியுறுத்தி, அன்றைய எதிர்க்கட்சியான காங்கிரஸ், மாநில தலைவர் சிவகுமார் தலைமையில், பாதயாத்திரை நடத்தியது. இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
கொரோனா விதிமுறைகளை மீறியதாக, ஹலசூரு கேட் போலீஸ் நிலையத்தில், வழக்கு பதிவானது. விசாரணை நடந்து வந்தது.
இந்த வழக்கை ரத்து செய்ய கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில், சிவகுமார் மனு தாக்கல் செய்திருந்தார், விசாரணை நடத்திய உயர் நீதிமன்றம், சிவகுமார் மீதான வழக்கை ரத்து செய்து, நேற்று உத்தரவிட்டது. இதனால் அவர் நிம்மதி அடைந்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement