பீஜிங்,-சீனாவில் 25 பள்ளி குழந்தைகளுக்கு விஷம் கொடுத்ததில், ஒரு குழந்தை உயிரிழந்ததை அடுத்து கைது செய்யப்பட்ட மழலையர் பள்ளி ஆசிரியை துாக்கிலிடப்பட்டார்.
நம் அண்டை நாடான சீனாவில் உள்ள மெங்மெங் பகுதியில் மழலையர் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 2019ல் ஆசிரியையாக பணியாற்றிய வாங், 40, என்பவர் பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட மதிய உணவில் விஷப் பொருளான சோடியம் நைட்ரேட்டை கலந்தார்.
இந்த சம்பவத்தில், 25 குழந்தைகள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து வாங் கைது செய்யப்பட்டார். அவருக்கு ஒன்பது மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட குழந்தைகளில் ஒரு குழந்தை மட்டும், 10 மாத சிகிச்சைக்குப் பின், உடல் உறுப்புகள் செயலிழந்த நிலையில் சமீபத்தில் உயிரிழந்தது. இதையடுத்து ஆசிரியை வாங்கிற்கு துாக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அவரின் மேல்முறையீடு மனு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டதை அடுத்து, வாங் நேற்று துாக்கிலிடப்பட்டார்.
வாங் கைது செய்யப்படுவதற்கு இரண்டு மாதத்துக்கு முன்பாக, இதே சோடியம் நைட்ரேட்டை அவர் தன் கணவருக்கும் கொடுத்துள்ளார். இருப்பினும், அவர் உயிர் பிழைத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement