சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறப்பு… உடனடி தரிசனம்… கேரள அரசு அதிரடி!

ஆடி மாத பிறப்பை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் இன்று மாலை நடை திறக்கப்படுகிறது.

சபரிமலை ஐயப்பன் கோவில்கேரளாவில் உள்ள புகழ் பெற்ற கோவில்களில் சபரிமலை ஐயப்பன் கோவிலும் ஒன்றும். சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கும் நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்கதர்கள் ஆண்டுதோறும் மாலை அணிந்து விரதமிருந்து நேர்த்திக் கடன் செலுத்தி வருகின்றனர். குறிப்பாக தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய தென் மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்கு சென்று வருகின்றனர்.
​ ரெட் அலர்ட்… அடுத்த 4 நாட்களுக்கு மிக கனமழை கொட்டித்தீர்க்கும்.. வானிலை மையம் வார்னிங்!​ஒவ்வொரு மாதமும்சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டு தோறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடை பெறுவது வழக்கம். இதேபோல் ஒவ்வொரு மாதப் பிறப்பின் போதும் முதல் 5 நாட்கள், விஷு, ஓணம் பண்டிகை, பங்குனி உத்திரம் போன்ற நாட்களிலும் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு வருகிறது.​ அதிமுகவுக்கு ஓபிஎஸ் புற்றுநோயாகத்தான் இருப்பார்… ராஜன் செல்லப்பா கடும் தாக்கு!​
இன்று மாலை நடைதிறப்புஇந்நிலையில் நாளை ஆடி மாத பிறப்பை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் இன்று மாலை நடை திறக்கப்படுகிறது. இன்று மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி, நடையை திறந்து வைக்கிறார். இன்று நடை திறக்கப்பட்டு கோவில் கருவறை மற்றும் சன்னிதான சுற்றுப்புற பகுதிகள் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெறும். இதனை தொடர்ந்து தீபம் ஏற்றப்பட்டு நடை சாத்தப்படும்.
​ கன்னம் மின்னுதே… கிரித்தி ஷெட்டியின் அசர வைக்கும் புகைப்படங்கள்!​5 நாட்கள்பின்னர் 17ஆம் தேதியான நாளை முதல் 21ஆம் தேதி வரை 5 நாட்கள் நடை திறந்திருக்கும். கோவிலில் வழக்கமான நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷபூஜை, உச்சபூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், களபாபிஷேகம், படிபூஜை, உதயாஸ்தமன பூஜை ஆகியவை நடைபெறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
​ இந்திய வம்சாவளி சிங்கப்பூர் அமைச்சர் ஈஸ்வரன் ஊழல் வழக்கில் கைது!​ஆன்லைன் முன்பதிவுவரும் 21 ஆம் தேதி அத்தாழ பூஜைக்கு பிறகு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு இரவு 10 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும். ஆடி மாத பூஜையையொட்டி பக்தர்கள் வழக்கம் போல் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது.
​ ‘என் சூப்பர் மேன்’… அமீர் பிறந்த நாளில் ரொமான்டிக் போட்டோக்களை வெளியிட்ட பாவனி ரெட்டி!​சிறப்பு பேருந்துகள்பக்தர்களின் வசதிக்காக நிலக்கல்லில் உடனடி தரிசனத்திற்கான முன்பதிவு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் வசதிக்காக திருவனந்தபுரம், கோட்டயம், செங்கன்னூர், பத்தனம் திட்டை, கொட்டாரக்கரை, எர்ணாகுளம் உள்பட மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இருந்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு கேரள அரசு போக்குவரத்துகழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
​ இன்னமும் கண்ணாமூச்சி ஆடினால்… அமலாக்கத்துறை மருத்துவமனைக்குள் அதிரடியாக நுழையும்… திகில் கிளப்பும் ஹெச் ராஜா!​

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.