புதுடில்லி: கடந்த 9ம் தேதி ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இருந்து டில்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில், அதிகாரி ஒருவரை தாக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இது தொடர்பாக வெளியான தகவல்: ஏர் இந்தியா அதிகாரி ‛எகானமி’ வகுப்பில் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், அதில் பிரச்னை ஏற்பட்டது. மற்ற இருக்கைகளில் பயணிகள் அமர்ந்திருந்தனர். இதனால், அவர் ‛பிசினஸ்’ வகுப்புக்கு சென்றார். அப்போது, பயணி ஒருவருக்கும், அதிகாரிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, அதிகாரி மென்மையாக பேசுமாறு அந்த பயணியிடம் கூறியுள்ளார். ஆனால் பயணி அதனை கேட்காமல் கன்னத்தில் அறைந்ததுடன், தலையிலும் தாக்கி உள்ளார். மற்ற அதிகாரிகளால், அந்த பயணியை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனையடுத்து அதிகாரி முன் இருக்கைக்கு சென்றார்.
பிறகு, அந்த பயணிக்கு, எழுத்துப்பூர்வமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், விமானம் தரையிறங்கியதுடன் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இதன் பிறகு, அந்த பயணி எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கோரினார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement