வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கொழும்பு: அமெரிக்க டாலரைப் போல், இந்திய ரூபாயும் பொது கரன்சியாக இருப்பதை வரவேற்பதாக, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.
கடும் நிதி நெருக்கடியில் சிக்கிய நம் அண்டை நாடான இலங்கையின் அதிபராக, ரணில் விக்ரமசிங்கே, கடந்தாண்டு பொறுப்பேற்றார். தன் முதல் வெளிநாட்டு பயணமாக, இந்தியாவுக்கு வரும் வாரத்தில் வரவுள்ளார்.
இந்நிலையில், கொழும்பில் சமீபத்தில் நடந்த, இந்திய நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் கூட்டத்தில் ரணில் விக்ரமசிங்கே பங்கேற்றார்.
![]() |
அப்போது அவர் கூறியதாவது:
கடந்த, 75 ஆண்டுகளுக்கு முன், ஜப்பான், கொரியா, சீனா போன்ற தென் கிழக்கு ஆசிய நாடுகள் பெரும் வளர்ச்சியைப் பெற்றன.
தற்போது இந்தியாவின் முறை. இந்தியப் பெருங்கடல் பகுதியில் உள்ள மற்ற நாடுகளையும், இந்தியா தன் வளர்ச்சிப் பாதையில் அழைத்து செல்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்தியா பெரும் முன்னேற்றத்தை, வளர்ச்சியை கண்டு வருகிறது.
தற்போது அமெரிக்காவின் டாலர் பொது கரன்சியாக பயன்படுத்தப்படுகிறது. அதுபோல, இந்திய ரூபாயையும் பயன்படுத்துவதை நாங்கள் வரவேற்கிறோம். அதற்கான முழு தகுதி இந்தியாவுக்கு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement